தேனி: தேசிய ஜனநாயகக் கூட்டணி தேனி தொகுதி வேட்பாளரும், அமமுக பொதுச்செயலாளருமான டிடிவி தினகரன் இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "என் சொந்தங்களாகக் கருதுகிற தேனி மக்களிடம் பணத்தைக் கொடுத்து வாக்குகளை வாங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ராமநாதபுரம் பெரிய தொகுதி என்பதால் எனக்காகப் பிரச்சாரம் செய்ய வர முடியாத நிலையில் ஓபிஎஸ் இருக்கிறார்.
அவர் சார்பாக அவரின் குடும்பம் மற்றும் அவர் கட்சியின் நிர்வாகிகள் எனக்காகச் சிறப்பாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். நடிகர் விஜய் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக உள்ள நிலையில், அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் தான் எஜமானர்கள், யார் வர வேண்டும் என்பது மக்கள் முடிவு செய்வார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்துச் சிறந்த மக்களாட்சியைக் கொடுக்கும்.