தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலியல் குற்றங்களை மறைக்கும் பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு திருச்சி கலெக்டர் எச்சரிக்கை! - Trichy Collector Pradeep Kumar - TRICHY COLLECTOR PRADEEP KUMAR

Trichy Collector Pradeep Kumar: 10 பேருக்கு மேல் பணியாற்றும் நிறுவனங்களிலும் புகார் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும், பாலியல் குற்றங்களை மறைக்கும பள்ளிகளின் தலைமை ஆசிரியர், முதல்வர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் எச்சரித்துள்ளார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர்  பிரதீப் குமார்
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2024, 4:22 PM IST

திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “பள்ளி குழந்தைகள் மீதான பாலியல் தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் விசாரணை மேற்கொண்டதில், பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மகனான மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த சம்பவத்தை தடுக்க தவறிய பள்ளியின் தலைமை ஆசிரியரும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளார். பள்ளி மட்டுமல்ல அனைத்து கல்வி நிறுவனங்களில் புகார் குழு அமைக்கவும் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கட்டாயமாக்கப்பட வேண்டும். கல்வி நிறுவனங்களில் ஏதேனும் சம்பவங்கள் நடைபெற்றால் கமிட்டி மூலமாக புகார் அளிக்கலாம்.

10 பேருக்கு மேல் பணியாற்றும் நிறுவனங்களிலும் புகார் குழு அமைக்கப்பட வேண்டும். திருச்சி மாவட்டத்தில் 268 கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இன்டர்னல் புகார் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஐடி உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் இது முழுமையாக ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பல கல்வி நிறுவனங்கள் புகார் குழுவை ஏற்படுத்தவில்லை. அதனால் முதல்வர் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு கமிட்டி ஏற்படுத்தாவிட்டால் என்ன மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கையுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்சோ சட்டத்தில் கல்வி நிறுவனங்களில் தலைமை ஆசிரியர் மற்றும் பேராசிரியரிடம் மாணவி புகார் அளித்தும், அதை காவல்துறையிடம் மறைத்தால் அந்த ஆசிரியர் மற்றும் கல்வி நிறுவனம் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும். எனவே மாணவிகள் அச்சமின்றி புகார் தெரிவிக்கலாம்.

பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டு செயல்படும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் இன்டெர்னல் புகார் குழு அமைக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஹாட்டஸ்ட் நூடுல்ஸ் என்ற வீடியோக்களைப் பார்த்து ஆன்லைனில் ஆர்டர் செய்து இளைஞர்கள் சாப்பிடுவது அதிகரித்துள்ளது.

நூடுல்ஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவு பாக்கெட்டுகளில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் குறிப்பிடாமல் சைனீஸ் அல்லது கொரியன் மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளதால் தரம் குறித்து ஆய்வு செய்யும் முடியாத நிலையில் உள்ளது. எனவே ஆன்லைனில் நூடுல்ஸ் வாங்கி சாப்பிடுவதை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டங்களிலும் லோக்கல் புகார் குழு, மாவட்ட ஆட்சியர் அல்லது அதற்கு இணையான அதிகாரமுடைய பெண் அதிகாரிகள் கொண்டு விசாரிக்கப்படும்.

திருச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி புகார் குழுவின் தலைவராக செயல்படுகிறார். பாலியல் புகார் தொடர்பாக ஒரு வருடத்திற்குள் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் உணவு பொருட்கள் சேமித்து வைக்கும் இடம் குறித்து தெரியாது. குடோன்களில் அவ்வப்போது ஆய்வு நடத்தி வருகிறோம்.

பொதுவாக இளைஞர்கள் ஆன்லைன் உணவு பொருளை தவிர்க்க வேண்டும். நமது முன்னிலையில் உணவு சமைத்து வருவதை நாம் சாப்பிட வேண்டும். அதேநேரம் குடோன்களில் இது போன்ற உணவு பொருட்கள் இருப்பின் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Click here ETV Bharat Tamil WhatsApp channel Click here (Credits - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க:"அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் எய்ம் எய்ம்ஸ் தான்" - அமைச்சர் அன்பில் மகேஷ்! - Minister Anbil Mahesh Poyyamozhi

ABOUT THE AUTHOR

...view details