சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குருப் 2 பணியில் 507 காலியிடங்களையும், 2 ஏ பணியிடங்களில் 1,820 காலியிடங்களுக்கு ஜூன் 20 ந் தேதி (இன்று) முதல் ஜூலை 19ந் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் எனவும், விண்ணப்பங்களில் திருத்தங்களை ஜூலை 24ந் தேதி முதல் 26ந் தேதி வரையில் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 14 ந் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையில் தேர்வு நடைபெறும் எனவும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
1,820 பணியிடங்கள்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு தொழிலாளர்நலத்துறையில் உதவி ஆய்வாளர் 13 இடம், துணை வணிகவரி அலுவலர் 336 , வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சிதுறையில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் பணி 5 இடம், தமிழ்நாடு சமூகப் பாதுகாப்பு சார்நிலைப் பணியின் நன்னடத்தை அலுவலர் ஒரு பணியிடம், சார்பதிவாளர் நிலை 2ல் காலிப்பணியிடம் 5, ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் 2 சிறப்பு உதவியாளர் பணியிடம், சென்னை மாநக காவல்துறையில் தனிப்பிரிவு உதவியாளர் 2 இடம், குற்றப்புலனாய்வு தனிப்பிரிவு உதவியாளர் 19 காலிப்பணியிடம், சட்டத்துறையில் உதவி பிரிவு அலுவலர் 3, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உதவிப் பிரிவு அலுவலர் 3 இடம், உதவி பிரிவு அலுவலர் 4 இடம், தமிழ்நாடு வனச் சார்நிலைப் பணியில் வனவர் 114 காலிப்பணியிடம் என 507 நிரப்பப்பட உள்ளது.
குருப் 2 ஏ பணியில் கூட்டுறவு முதுநிலை ஆய்வாளர், இந்து சமய அறநிலைத்துறை தணிக்கை ஆய்வாளர், உள்ளாட்சி நிதித்தணிக்கை உதவி ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வேளாண் சந்தைப்படுத்துதல் மற்றும் வேளாண் வணிகம் மேற்பார்வையாளர், இளநிலைக் கண்காணிப்பாளர், வணிகவரிகள் உதவியாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட 48 பதவிகளில் காலியாக உள்ள 1,820 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கு இன்று (ஜூன் 20) முதல் ஜூலை 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 14ஆம் தேதி முதல் நிலை தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு பதவிக்கான கல்வித்தகுதிகளும் வெளியிடப்பட்டுள்ளது.
குருப் 2 தேர்வில் மாற்றம்: இந்த நிலையில் குருப் 2 தேர்வில் மாற்றங்களையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
குருப் 2 முதல்நிலைத் தேர்வில் பொது அறிவில் பட்டப்படிப்பு நிலையில் 75 கேள்விகளும், பத்தாம் வகுப்பு நிலையில் திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவு பகுதியில் 25 கேள்விகளும், மாெழி (பொது தமிழ் அல்லது ஆங்கிலம் ) 100 வினாக்கள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். கேள்வித்தாள் கொள்குறி வகையில் ஓஎம்ஆர் முறையில் கேட்கப்படும்.