தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கும், ஸ்டாலின் ஆட்சிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை" - டிடிவி விமர்சனம்! - TTV DINAKARAN

முந்தைய எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கும், தற்போதைய ஸ்டாலின் ஆட்சிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

டி.டி.வி.தினகரனுக்கு நன்றி தெரிவித்த முல்லைப் பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் நலச் சங்கத்தினர்
டி.டி.வி.தினகரனுக்கு நன்றி தெரிவித்த முல்லைப் பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் நலச் சங்கத்தினர் (ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 28, 2025, 3:57 PM IST

சென்னை: மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி பகுதியில் அமைக்கப்பட இருந்த டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்படதையொட்டி அப் பகுதிகளைச் சேர்ந்த முல்லை பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் நலச் சங்கத்தினர் சென்னை அடையாறில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி.தினகரன் கூறியதாவது:

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டங்ஸ்டன் அனுமதிக்கு மத்திய அரசு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது. அப்போது தமிழக அரசு தேவை இல்லை என சொல்லி இருந்தால் அந்த திட்டமே வந்திருக்காது. தமிழக அரசு வெளியே செய்தி தெரியும் வரை மவுனம் காத்தது. மக்கள் போராடிய பிறகு திமுக அரசு பல்டி அடித்தது.

அந்த பகுதி மக்கள் போராட்டம் அறிவித்த பிறகு அண்ணாமலை இந்த திட்டம் உறுதியாக நிறுத்தப்படுவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவதாக என்னிடம் கூறினார். இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு முழு முயற்சி எடுத்தவர் அண்ணாமலை. அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. மதுரை பேராசிரியர் சீனிவாசன் உறுதுணையாக இருந்து செயல்பட்டார். இவர்களது கோரிக்கையை ஏற்று திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்திருக்கிறது. பிரதமர் மோடிக்கும் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி, அண்ணாமலைக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அரிட்டாபட்டிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சென்று இருக்கலாம். ஆனால் முதலமைச்சர் முந்திக் கொண்டு சென்றுவிட்டார்.

பட்டியலின மக்கள் முதலமைச்சராக வர வேண்டும் என்ற ஆளுநர் கருத்தை வரவேற்கிறேன். பரந்தூர் விமான நிலையம் குறித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாஜகவின் நிலைப்பாடு வேறு எங்களின் நிலைப்பாடு வேறு. சர்வதேச விமான நிலையம் வர வேண்டும் ஆனால் அது எங்கு வரவேண்டும் என்பதை மத்திய மாநில அரசுகள் சரியாக செய்ய வேண்டும்.

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திராவிட மாடல் என்று சொல்லி மக்களை ஏமாற்றும் திமுக ஆட்சி அகற்றப்பட்டு, தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியாக தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை அரசியலாகாமல் 100% நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இன்று தனியாக பெண்கள் வெளியே செல்ல முடியவில்லை.பழனிச்சாமிக்கும் ஸ்டாலினுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. இருவரது ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

தமிழ்நாடு அரசியலில் எம்ஜிஆர், அண்ணா, பெரியாரை தவிர்த்து விட்டு இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் அரசியல் செய்துவிட முடியாது. விஜய்யின் ஆசை பற்றி மக்கள் தான் தீர்ப்பு அளிப்பார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று திமுகவை வீழ்த்தும். கூட்டணி ஆட்சியை அமைப்போம்.

தனது இருப்பை காட்டிக் கொள்ள சீமான் இப்படி பேசுகிறார்.பெரியாரின் எல்லா கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டாலும் கடவுள் மறுப்பு, பிராமணர் எதிர்ப்பை நம்மளால் ஏற்றுக்கொள்ள முடியாது. சீமான் பேசுவதுக்கு பின்னால் பாஜக உள்ளது என்றால் சீமான் என்ன எடுப்பார் கைப்பிள்ளையா? அவருக்கு சுய புத்தி கிடையாதா?

இவ்வாறு அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details