திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே ஆத்துகுறிச்சி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு 3 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் இன்று காலை 9 மணி அளவில் சிறுவன் காணாமல் போனதை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
பெற்றோர்கள் குழந்தையை தேடி உள்ளனர். எங்கு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. அதனால் குழந்தையை காணவில்லை என பெற்றோர்கள் ராதாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் போலீசார் அப்பகுதியில் விசாரிக்கும் போது குழந்தை எதிர்வீட்டை சேர்ந்த தங்கம் என்ற பெண் வீட்டுக்குள் சென்றதை சிலர் கூறியுள்ளனர். எனவே, போலீசார் அங்கு சென்று பார்த்தபோது குழந்தையை கொலை செய்து சாக்கு மூட்டையில் அடைத்து, வாஷிங் மிசினில் வைத்திருந்தது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.