தூத்துக்குடி:நாடு முழுவதும் கடந்த மே 5ஆம் நடைபெற்ற நீட் தேர்வை லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் எழுதினர். அதில், தூத்துக்குடியில் உள்ள அழகர் பள்ளி மற்றும் கமலாவதி பள்ளியில் ஆயிரத்து 500 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதினர். இந்த தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் பலருக்கு மிகக் கடினமான MNOP வரிசை எண் கொண்ட வினாத்தாள் மாறுபட்டு இருந்தாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன் பின்னர், பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர், மத்திய, மாநில அரசுகள் மற்றும் தேசிய தேர்வு முகமை ஆகியவை உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும், தாங்கள் எழுதிய வினாத்தாள்களுக்கும் உரிய மதிப்பெண் வழங்கி, தனி கட் ஆஃப் மற்றும் கவுன்சிலிங் உள்ளிட்டவற்றை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில், இன்று (திங்கள்கிழமை) மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதியை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவர் விக்னேஷ் சுப்பிரமணியன் கூறியதாவது, "தூத்துக்குடியில் உள்ள இரண்டு பள்ளிகளில் தேர்வு எழுதியவர்களுக்கு மட்டும் முற்றிலுமாக மாறுபட்ட வினாத்தாள் (MNOP) வழக்கப்பட்டுள்ளது.