தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“செய்தியாளர் சந்திப்பில் மன்னிப்பு கேட்பதில் சில சிக்கல்கள் உள்ளது”.. ஷோபா கரந்தலஜே தரப்பு வாதம்! - Shobha Karandlaje case - SHOBHA KARANDLAJE CASE

Shobha Karandlaje: தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில், செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கேட்பதில் சில சிக்கல்கள் உள்ளதாக மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷோபா கரந்தலஜே
ஷோபா கரந்தலஜே (Credits - Shobha Karandlaje 'X' Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 16, 2024, 8:56 PM IST

சென்னை: பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த நபர் தான் காரணம் என மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர், இது தொடர்பாக திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இரு பிரிவினரிடையே கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஷோபா கரந்தலஜே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஷோபா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, செய்தியாளர் சந்திப்பு நடத்தி ஷோபா மன்னிப்பு கோரினால் ஏற்க தயாராக இருப்பதாக அரசுத் தலைமை வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஷோபா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கோருவதில் சில சிக்கல்கள் உள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே எக்ஸ் தளத்தில் மன்னிப்பு கேட்கப்பட்டு விட்டதாகவும் கூறினார்.

இதனையடுத்து, முதலமைச்சரின் கருத்தை பெற்றே செய்தியாளர் சந்திப்பில் மன்னிப்புக் கோரினால் ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவித்ததாக அரசுத் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் கூறினார். தொடர்ந்து, அமைச்சர் ஷோபா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகி வாதங்களை முன் வைக்க அனுமதி கோரப்பட்டதை அடுத்து, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க:மத்திய அமைச்சர் மன்னிப்பு கேட்டால் ஓகே.. கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழக அரசு திட்டவட்டம்!

ABOUT THE AUTHOR

...view details