தஞ்சாவூர்:தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நேற்று (ஆகஸ்ட் 6) மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தஞ்சை, கரந்தை பகுதியை சேர்ந்த மக்களுக்கு சாலை வசதி வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பள்ளி குழந்தைகள் ஒன்றிணைந்து மனு அளித்தனர்.
அதை கண்ட மாவட்ட ஆட்சியர் பிரியா பங்கஜம், பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகளை அழைத்து வந்தது யார் என கேள்வி எழுப்பினார். மேலும் படிக்கும் குழந்தைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வரும்படி பள்ளியில் இருந்து சீருடையுடன் அழைத்து வந்திருப்பது தவறாகும். இதுபோன்று இனி நடந்தால் குழந்தைகளை அழைத்து வந்தவர்கள் மீது வழக்கு பதிவுச் செய்யப்படும். மக்களாகி நீங்கள் உங்களின் குறைகளை எப்போது வேண்டுமானாலும் ஆட்சியரிடம் தெரிவிக்கலாம். ஆனால் அவை உங்களின் நன்மைகாக இருக்கும் நோக்கத்தை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். வழக்கு பாயும் அளவிற்கு அதை எடுத்து செல்ல தேவையில்லை” என்றார்.
அதேபோல் தஞ்சை அடுத்த வடுகன்பட்டி கிராமத்தை சேர்ந்த சிலர் பள்ளி மாணவ மாணவிகளுடன் பஸ் வசதி வேண்டி மனு அளிக்க வந்தனர். இதை பார்த்த ஆட்சியர் மேலும் கோபமடைந்து, முதலில் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு குழந்தைகளை இங்கு அழைத்து வந்திருப்பது தவறான போக்கு, குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டியது பெற்றோர் பொறுப்பு.