தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விஜய் கட்சிக் கொடிக்கு புதிய சிக்கல்... பகுஜன் சமாஜ் பகிரங்க எச்சரிக்கை! - Bahujan samaj party warns Vijay - BAHUJAN SAMAJ PARTY WARNS VIJAY

Bahujan samaj party warns Vijay: விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை நீக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

த.வெ.க கொடியுடன் விஜய்
த.வெ.க கொடியுடன் விஜய் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2024, 12:40 PM IST

சென்னை: நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சி தொடங்கிய நிலையில், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாகவும் அறிவித்தார். இதன் பிறகு டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் கட்சியை பதிவு செய்தார். அதன் பிறகு 10,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 234 சட்டமன்ற தொகுதிவாரியாக முதல் மூன்று இடம்பிடிக்கும் மாணவர்களுக்கு த.வெ.க சார்பில் பாராட்டு விழா நடத்தி விஜய் அவர்களை நேரில் கௌரவித்தும் வருகிறார்.

இந்நிலையில் இன்று விஜய் த.வெ.க கொடியை அறிமுகப்படுத்தினார். அந்த கட்சிக் கொடியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் இரண்டு யானைகளும் வெற்றியைக் குறிக்கும் வகையில் வாகைப்பூவும் இடம்பெற்றுள்ளது. மேலும் த.வெ.க பாடலையும் அறிமுகப்படுத்தினார்.

இந்நிலையில் விஜய் கட்சிக் கொடிக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) சின்னமான யானை படத்தை த.வெ.க கொடியில் பயன்படுத்துவது தேர்தல் விதியின்படி தவறானது. உடனடியாக விஜய் கட்சியின் கொடியில் உள்ள யானை படத்தை நீக்க வேண்டும், இல்லையென்றால் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு வழங்கப்பட்டு, வழக்கும் தொடுக்கப்படும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி கொடியில் நீல நிறத்தில் யானை சின்னம் இடம்பெற்றிருக்கும். முன்னதாக கடந்த 19ஆம் தேதி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் மஞ்சள் நிறம், நடுவில் விஜய் படம் இருப்பது போன்ற கொடியை ஏற்றி விஜய் ஒத்திகை பார்த்த வீடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: தமிழக வெற்றிக் கழகம் மாநாடு எப்போது? - கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய பின் விஜய் கூறிய தகவல் - tamizhaga vettri kazhagam Flag

ABOUT THE AUTHOR

...view details