சென்னை:இந்திய பிரதமர் மோடியின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தி நகரில் உள்ள கமலாலயத்தில் உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், "இந்திய பிரதமர் மோடியின் 74வது பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு தொண்டர்களும், நிர்வாகிகளும் 74 உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் அறிவுறுத்தியிருக்கிறோம்.
தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu) இந்தியாவில் 3வது முறையாக பாஜக ஆட்சி அமைத்து, இன்று நூறு நாட்களைக் கடந்து சிறப்பாக மக்களை வழிநடத்தி வருகிறது. இந்த நூறு நாட்களில் 15 லட்சம் கோடி ரூபாய் அளவில் நலத்திட்டங்கள், 25 கிராமங்கள் இந்த நலத்திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. அவற்றில் கிராமத்தில் அடிப்படை கட்டமைப்புகளை செயல்படுத்த இருக்கிறது.
தற்போது 75,000 மருத்துவ சீட்டுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய மருத்துவ புரட்சியாகும். எப்படி ஒரு ஹீரோவின் படம் நூறு நாட்கள் ஓடி விட்டால் பிரமாண்டமாக கொண்டாடுகறார்களோ அதேபோல்தான் இடைவெளியே இன்றி உழைக்கும் தலைவர் இந்திய பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து 100 நாட்கள் முடிவடடைந்து இருக்கும் தருணத்தில் எங்கள் ஹீரோ இந்திய பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு குறித்த கேள்விக்கு, “ஆட்சியில் பங்கு கேட்போம் என்று செய்திகளை செல்லிவிட்டு தற்போது பின் வாங்குகிறார். ஸ்டாலினை பார்த்து விட்டு வந்தவுடன் திருமாவளவன் சிறுத்து போய்விட்டார். திமுகவை மேடையில் வைத்துக் கொண்டு எந்த விதமான மது விளக்கு கொள்கையை பேச போகிறீர்கள்.
இதையும் படிங்க: அன்னபூர்ணா விவகாரம்; சிங்காநல்லூர் பாஜக பிரமுகர் கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்!
இந்த மாநாட்டிற்கு ஸ்பான்சர் கொடுப்பவர்கள் அனைவருமே டாஸ்மாக் ஓனர்கள் தான். இது தமிழக மக்களிடத்தில் எந்த ஒரு தாக்கத்தை ஏற்படுத்த போவதில்லை. தேசிய கல்விக் கொள்கை ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள். ஆனால் தேசிய மது விலக்கு கொள்கைகளை மட்டும் கேட்கிறார்கள்.
பின்னர் பெரியார் பிறந்தநாள் குறித்த கேள்விக்கு,"கருப்பு சட்டை போட்டிருப்பவர்களுக்கு காவி சட்டைகளின் பெரியார் பிறந்தநாள் வாழ்த்துக்கள். தமிழகத்தில் ஒரு எதிர்மறையான அரசியலை செய்வது திமுக. நாங்கள் நேர்மறை அரசியலை செய்து வருகிறோம். 1967இல் எந்த காங்கிரஸுக்கு எதிராக மாநாடு நடத்தினார்களோ தற்போது அதே காங்கிரஸ் சுமந்து கொண்டுதான் திமுக செல்கிறது. தமிழகத்தில் ஒரு மாற்று ஆட்சியை தேசிய அளவில் இருக்கக்கூடிய ஒரு கட்சியால் கொண்டு வர வேண்டும்" என்றார்.
நடிகர் விஜய் குறித்த கேள்விக்கு "திமுக சாயலில் எந்த ஒரு அரசியல் கட்சியும் தேவையில்லை. தேசிய அரசியல் கட்சி சாயலில்தான் தமிழகத்தில் கட்சி தேவை. விஜய் திராவிட சாயத்தை பூசிக்கொண்டு இருக்கிறார், அது வெளுக்குமா, இல்லை அப்படியே இருக்குமா என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழக அமைச்சர்களின் பிள்ளைகள் யாரெல்லாம் இரு மொழி கொள்கைகளில் படிக்கிறார்கள்? ஏழை மக்களுக்கு மட்டும் இரு மொழி கொள்கையாம். இவர்கள் குழந்தைகளுக்கு உயர் தர கல்வி வழங்குகிறார்கள். யாமறிந்த மொழிகளிலேயே தமிழ்மொழி போல் எங்கும் காலம் என்று பாரதி கூறினார். ஆனால் அவர் 18 மொழிகளை கற்றுக் கொண்டவர்” என்று தெரிவித்தார்.