புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், வண்டிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி பெண் புவனேஸ்வரி (42). இவரின் கணவர் சுரேஷ் குமார் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து, தனியாக வசித்து வரும் புவனேஸ்வரி, தனது வீட்டில் கழிவறை வசதி இல்லாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, புவனேஸ்வரி தமிழக வெற்றிக் கழக மாவட்ட பொறுப்பாளர் பர்வேஸ்ஸைச் சந்தித்து, தனக்கு கழிவறை கட்டித் தர வேண்டும் என ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளார். இப்பெண்ணின் கோரிக்கையை ஏற்று, தமிழக வெற்றிக் கழக புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பாளர் பர்வேஸ், புதிய கழிவறையைக் கட்டி மாற்றுத்திறனாளி பெண்ணின் பயன்பாட்டுக்கு கொடுத்தார்.