தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"யாரிடமாவது காசு வாங்கி டீ குடிப்பவர் தான் ஈபிஎஸ்" - அண்ணாமலை பரபரப்பு பேச்சு! - Annamalai Criticized EPS - ANNAMALAI CRITICIZED EPS

Annamalai Criticized EPS: “எடப்பாடி பழனிசாமி டீ குடிக்க வேண்டும் என்றால் கூட யாரிடமாவது பணம் வாங்கித்தான் டீ குடிப்பார் போல் உள்ளது. ஆனால், நாங்கள் அப்படி அல்ல, டீ குடிக்க வேண்டுமென்றால் கூட சொந்த காசில் தான் குடிப்போம்” என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Annamalai Criticized EPS
Annamalai Criticized EPS

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 24, 2024, 7:25 PM IST

Updated : Mar 24, 2024, 7:37 PM IST

Annamalai Criticized EPS

கோயம்புத்தூர்: கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், பாஜக நிர்வாகிகளின் கட்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரும், அக்கட்சியின் மாநிலத் தலைவருமான அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்த கூட்டத்தின் தொடர்ச்சியாக செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “நம்முடைய போட்டி கோவை நாடாளுமன்றத் தொகுதியில் எந்தவித வேட்பாளர்களுடனும் கிடையாது. 2019ஆம் ஆண்டு 295 தேர்தல் வாக்குறுதியை அளித்தோம், அது அத்தனையையும் நிறைவேற்றி இருக்கின்றோம். அதேபோல், 2024-இல் கூறுகின்ற தேர்தல் வாக்குறுதியையும் செய்யப் போகின்றோம்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, கோவை நாடாளுமன்றத் தொகுதியை எப்படி மாற்றிக் காட்டப் போகின்றோம் என்ற சவாலுக்காகத்தான் நாங்கள் இங்கு வந்திருக்கின்றோம். மோடியின் மத்திய அமைச்சரவைக்கும், கோவை மக்களுக்கும், இந்த அண்ணாமலை ஹாட் லைனாக இருப்பான். ஒரே ஒரு பட்டன், அதற்கான தீர்வு இந்த அண்ணாமலை" என்று தெரிவித்தார்.

இதனை அடுத்து, பாஜகவின் தேர்தல் செலவுகள் பற்றி எடப்பாடி பழனிசாமி விமர்சித்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கக்கூடிய பிரச்னை என்னவென்றால், ஒருவர் கூறுவதை முழுமையாகக் கேட்பதில்லை. கேட்கக்கூடிய தன்மையையும் அவர் இழந்து விட்டார்.

ஓட்டுக்கு பணம் கொடுக்காமல், கோவையில் ஜெயிக்க முடியும் என்பதுதான் நம்முடைய சவால். இதேபோன்று, பிற கட்சிகளை சவால் விடக் கூறுங்கள். அவர்கள் ஆளுகின்ற பொழுது சம்பாதித்த பணமெல்லாம் யார் கையில் இருக்கிறதோ, அவர்களில் பாதி பேர் தான் வேட்பாளர்களாக உள்ளார்கள்.

பாஜகவினர் அவர்களது கை காசை போட்டு வேலை செய்கிறார்கள். இதுதான் மாற்று அரசியல். மாற்று அரசியல் செய்யாமல் கல்லாப்பெட்டி கட்டியவர்களுக்கு அது பற்றி எப்படி தெரியும்? எனவே, யார் என்ன பேசுகிறார்கள் என்று முதலில் காது கொடுத்துக் கேட்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி டீ குடிக்க வேண்டும் என்றால் கூட யாரிடமாவது பணம் வாங்கித்தான் டீ குடிப்பார் போல் உள்ளது. ஆகவேதான், டீ குடிப்பதை உதாரணமாக கூறியிருக்கிறார். ஆனால், நாங்கள் அப்படி அல்ல. டீ குடிக்க வேண்டுமென்றால் கூட சொந்த காசில் தான் குடிப்போம்" என்று பதிலளித்தார்.

தொடர்ச்சியாக, மதுரை எய்ம்ஸ் பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, "அவரது அறிவு அவ்வளவு தான். அரசியலில் பக்குவப்படாதவர்கள், அறிவு இருக்கக்கூடியவர்கள், மக்களுக்கு சமுதாயப் பணி செய்பவர்கள். இவர்களெல்லாம் ஆட்சிக்கு வராமல், தாத்தா மற்றும் அப்பாவின் பெயரை இன்சியலாக வைத்துக் கொண்டு வந்தால் செங்கல்லைத் தூக்கிக் கொண்டு காட்டுகின்ற புத்தி தான் இருக்கும். 2026ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்" என்று கூறினார்.

மேலும் தொடர்ச்சியாக பேசிய அவர், "அதிமுகவும், திமுகவும் ஏப்ரல் 10ஆம் தேதி ஒன்றிணையப் போகிறது. அப்போதுதான் பங்காளி கட்சிகளின் சுயரூபத்தை பார்ப்பீர்கள். தற்பொழுது இரண்டு கட்சிகளும் நிற்பது எதற்கென்றால், பண பலத்தை வைத்து அண்ணாமலையை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

திமுககாரர்களுக்கு கோவையில் என்ன வேலை? ஏப்ரல் 10ஆம் தேதிக்கு மேல் இரு கட்சிகளும், இரண்டு வேட்பாளர்களில் ஒரு வேட்பாளரை விட்டுக் கொடுத்து, ஒரு வேட்பாளரை நிறுத்தி, ஓட்டு டிரான்ஸ்வர் செய்வதற்கு முயற்சி செய்வார்கள். இது போன்று கேரளாவில் பார்த்திருப்போம். ஆனால், தமிழ்நாடு அரசியலில் கோவையில் முதல்முறையாக நடக்கும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:மீண்டும் ஜோதிமணி போட்டி.. கரூர் களம் எப்படி இருக்கிறது? - Karur Lok Sabha Constituency

Last Updated : Mar 24, 2024, 7:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details