சென்னை: சென்னையில் இருந்து கோவை, மைசூரு, புவனேஸ்வர் போன்ற நகரங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவைகளை ஏப்ரல் மாதம் வரை நீடித்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 8 சிறப்பு ரயில்களின் சேவை ஜனவரி மாதம் வரை செயல்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது இந்த ரயில் சேவை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
சிறப்பு ரயில்களின் விவரம்: சென்னை- புபனேஸ்வர் இடைய வாராந்திர சிறப்பு ரயில் (திங்கட்கிழமை மட்டும்) பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் 29 ஏப்ரல் வரை என 13 சேவைகளை நீடித்துள்ளது. இதே ரயில் மறுமார்க்கத்திலும் நீடிக்கபட்டுள்ளது.
சென்னை-கோவை இடைய வந்தே பாரத் ரயில்களை செவ்வாய்கிழமைகளில் சிறப்பு ரயில்களாக, பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் 27 பிப்ரவரி வரை 4 சேவைகளை நீடித்துள்ளது. மேலும், இந்த ரயில் மறுமார்க்கத்திலும் நீடிக்கபட்டுள்ளது.