தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

120 நாட்களைக் கடந்தும் நீர் நிறைந்து காணப்படும் சோத்துப்பாறை அணை - விவசாயிகள் மகிழ்ச்சி! - நீர் பிடிப்பு பகுதிகள்

Sothuparai Dam: சோத்துப்பாறை அணை கட்டப்பட்ட 20 ஆண்டுகளில், முதல் முறையாக அணையில் 120 நாட்களைக் கடந்தும் முழு கொள்ளளவு நீர் இருப்பதால், பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Sothupparai Dam is still full capacity even after 120 days
120 நாட்களைக் கடந்தும் முழு கொள்ளளவுடன் காணப்படும் சோத்துப்பாறை அணை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 17, 2024, 10:26 AM IST

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி மற்றும் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் ஆதாரமாகவும்,
3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விலை நிலங்களின் பாசனத்திற்கும், சோத்துப்பாறை அணையில் தேக்கி வைக்கப்படும் நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சோத்துப்பாறை அணை கடந்த ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி, அதன் முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில், அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வழிந்தோடியது. மேலும், கடந்த ஜனவரி 10ஆம் தேதி வரை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக, அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து வந்ததால், அணையின் முழுக் கொள்ளளவான 126.28 அடி நீர் நிறைந்து உபரி நீர் வெளியேறி வந்தது.

அணை கட்டப்பட்டு 20 ஆண்டுகள் ஆன நிலையில், அணையின் முழுக் கொள்ளவுடன் 120 நாட்கள் நிறைந்து உபரி நீர் வழிந்து ஓடுவது இதுவே முதல் முறையாகும். தற்பொழுது, சோத்துப்பாறை அணையின் முழு கொள்ளளவான 126.28 அடியில் நீர் தேக்கப்பட்டுள்ள நிலையில், அணைக்கு நீர்வரத்து 12 கன அடியாகவும், அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் 25 கன அடியாகவும் உள்ளது.

மேலும், அணையில் நீர் இருப்பு 98 மில்லியன் கன அடியாக உள்ளது. இந்நிலையில், சோத்துப்பாறை அணை கட்டப்பட்டு முதன்முறையாக 120 நாட்களைக் கடந்து முழுக் கொள்ளவுடன் அணையில் நீர் நிரம்பி வழிந்து ஓடுவதால், பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை விமானத்தில் பறக்கச் செய்த மைம் கோபி!

ABOUT THE AUTHOR

...view details