தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனியில் தமிழக அரசை கண்டித்து சிவசேனாவினர் போராட்டம்: கள்ளக்குறிச்சி சம்வத்தின் எதிரொலி.! - theni shiv sena protest - THENI SHIV SENA PROTEST

shiv sena protest: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தேனியில் தமிழக அரசை கண்டித்தும், முதலமைச்சர் மு.க ஸ்டாலினை பதவி விலகக்கோரியும் அவரது உருவ பொம்மையை எரிக்க முயன்ற சிவசேனா கட்சியினரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சிவசேனா கட்சியினர் போராட்டம்
சிவசேனா கட்சியினர் போராட்டம் (Credits-ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 22, 2024, 6:03 PM IST

தேனி:கடந்த 18 ஆம் தேதி கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 2 பேர் உயிரிழந்து பலருக்கு வயிற்று வலி, கண் பார்வை பாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து உடல் நிலை பாதிக்கப்பட்டு இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 115 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது தமிழகத்தையே உலுக்கி உள்ளது.

போராட்டம் நடத்திய சிவசேனா கட்சியினர் (Credits-ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில் தேனி அல்லிநகரம் பகுதியில் சிவசேனா கட்சியினர் இந்த விவகாரத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும், முதலமைச்சர் மு.க ஸ்டாலினை பதவி விலக கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவரது உருவ பொம்மையை எரிக்க முயன்றதோடு, மு.க ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என கோஷங்களையும் முழக்கியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் போலீசார் அவர்களிடம் இருந்து உருவ பொம்மையை பறிமுதல் செய்து அங்கிருந்து எடுத்துச் சென்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி விவகாரம் எதிரொலி; கலெக்டர்கள், எஸ்பிகளுக்கு முதலமைச்சர் போட்ட முக்கிய உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details