தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசிரியர்கள் பொது மாறுதல் விண்ணப்பத்தில் தவறுகள் இருந்தால் ஒழுங்கு நடவடிக்கை.. பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை! - Teachers Transfer Counseling - TEACHERS TRANSFER COUNSELING

Government Teachers general transfer: 2024-25ஆம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த ஆசிரியர்களின் விண்ணப்பங்களில் தவறுகள் ஏதும் பின்னர் கண்டுப்பிடித்தால் தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

school education department chennai photo
பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 11, 2024, 4:24 PM IST

சென்னை:பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், “2024-25ஆம் கல்வியாண்டிற்கும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வினை நடத்த அரசு அனுமதி வழங்கி உள்ளது. இக்கலந்தாய்வு, கல்வி தகவல் மேலாண்மை முகமை (EMIS) இணையதளம் மூலமாக மேற்கொள்ளவும், அதற்கான ஆயத்தப் பணிகளைச் செய்யவும் அனுமதி வழங்கி உள்ளது.

இந்த கல்வியாண்டில் (2024-25) ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கோரி விண்ணப்பிக்க தற்போது பணிபுரியும் பள்ளியில் வருகிற ஜூன் 1 அன்று ஓராண்டு பணி முடித்திருக்க வேண்டும். ஒவ்வொரு ஆசிரியரும் மாறுதலுக்கான விண்ணப்பத்தினை EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.

பள்ளித் தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு விண்ணப்பித்த சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் விண்ணப்பத்தினை அனுமதி வழங்கிய பின்னர், அதனை மூன்று நகல்கள் எடுத்து ஒன்றினை சார்ந்த ஆசிரியருக்கு சார்பு செய்துவிட்டு மற்றொரு பிரதியினை சம்மந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.

விருப்ப மாறுதல், மனமொத்த மாறுதல், நேரடி நியமனம், பதவி உயர்வு, நிர்வாக மாறுதல், அலகு மாறுதல், பணிநிரவல் இவற்றில் எந்த வகை என்பதை உரிய ஆதாரத்துடன் பதிவேற்றம் செய்திடல் வேண்டும். மாறுதல் கேட்கும் விண்ணப்பங்களை 13.5.2024 முதல் 17.5.2024 அன்று மாலை 6 மணி வரை EMISஇல் இணையத்தில் பதிவேற்றம் மேற்கொள்ளலாம். மேலும் காலிப்பணியிட விவரங்கள் EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்து முடிக்கப்பட்டவுடன் பின்னர் சேர்க்கை, நீக்கம், திருத்தங்கள் போன்றவைகளுக்கு இடமளிக்காமல் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

பணிநிரவல் (Deployment) கலந்தாய்வுக்கு மட்டும் காண்பிக்கப்படும் கூடுதல் தேவையுள்ள (Need Post) காலிப்பணியிடங்களையும் மேற்படி இணையத்திலேயே அதற்கென உள்ள உரிய படிவத்தில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும். பொதுவான அறிவுரைகள் கணவன், மனைவி (Spouse Priority) முன்னுரிமையில் மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் அவரவர்கள் பணிபுரியும் அலுவலகம், பள்ளி அரசு மற்றும் அரசுத்துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ளதா என்ற விவரத்தினையும், அதற்கான உரிய அலுவலரிடம் பெறப்பட்ட சான்றினையும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

கணவன், மனைவி பணிபுரியும் இடத்திற்கான தொலைவு 30 கி.மீ மேல் உள்ளதை சரிபார்த்து உறுதி செய்யப்பட வேண்டும். மனமொத்த மாறுதல்கள் (Mutual Transfer) மற்றும் அலகுவிட்டு அலகு மாறுதல் , துறை மாறுதல்கள் (Unit Transfer) சார்பான விண்ணப்பங்கள், பொது மாறுதல் கலந்தாய்வு முடிந்த பின்னர் பரிசீலிக்கப்பட வேண்டும்.

மேலும் மாறுதலுக்கும் விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் உள்மாவட்டம், மாவட்டம் விட்டு மாவட்டம் ஆகிய இரு கலந்தாய்விற்கும் விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவர்கள் உள்மாவட்டத்திற்குள் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொண்டு மாறுதல் ஆணை பெற்றவர்கள் மாவட்டம் விட்டு மாவட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது.

மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து கலந்தாய்வு நடைபெறும் அன்றைய நாளில் வருகை புரியாமலோ, தாமதமாக வருகை புரிந்தாலோ கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது. மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்களின் விண்ணப்பங்களில் தவறுகள் ஏதும் பின்னர் கண்டறியப்பட்டால் தக்க ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

உபரி எனக் கண்டறியப்பட்ட ஆசிரியர்களில் 40% மாற்றுத்திறனாளி, 40% கண் பார்வையற்றவர் மற்றும் NCC பொறுப்பில் உள்ளவர்களுக்கு மட்டும் பணி நிரவல் கலந்தாய்வில் விலக்களிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக அடுத்த இளையவரை அதே பாடத்தில் பணி நிரவலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்" என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சிதம்பரம் கோயில் பிரம்மோற்சவ விவகாரம்; விசாரணையை அடுத்த மாதம் தள்ளிவைத்த சென்னை நீதிமன்றம்! - Govindaraja Perumal Temple

ABOUT THE AUTHOR

...view details