விருதுநகர்:நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி என்றாலே புத்தாடை, இனிப்பு, பட்டாசு தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அந்த வகையில், பட்டாசு என்பது தீபாவளி பண்டிகைக்கு முக்கிய ஒரு பொருளாக இருந்து வருகிறது. குறிப்பாக இந்திய அளவில், பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு புகழ்பெற்றது சிவகாசி தான். தீபாவளி மட்டுமின்றி, அனைத்து வீட்டு விஷேசங்களுக்கும் இங்கு வந்து மக்கள் பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனர்.
அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு விற்பனை, ஆடி 18ஆம் பெருக்கு தினத்தில் தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழகம் மட்டுமின்றி வட மாநிலங்களில் இருந்தும் பட்டாசு மொத்த வியாபாரிகள் ஆர்டர் கொடுத்த பட்டாசுகள் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் மக்கள் பட்டாசுகளை ஆர்வமாக வாங்கிச் சென்றனர்.
இதையும் படிங்க: மதுரையில் களைகட்டிய தீபாவளி.. புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து மக்கள் உற்சாகம்!