தமிழ்நாடு

tamil nadu

"திறமை இருந்தால் ஏரிகளில் மண் எடுத்துக்குங்க; மாட்டிக்கிட்டா புலம்பாதீங்க" - திமுக மாவட்டச் செயலாளர் பகீர் பேச்சு! - sand issue

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2024, 9:15 PM IST

Sand Issue : உங்களுக்கு திறமை இருந்தால் ஏரிகளில் மண் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டால் நம்ம கட்சி நம்மை காப்பாற்றவில்லை என சொல்லி புலம்ப வேண்டாம் என, திமுக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர் சிவலிங்கம் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியுள்ளார்.

திமுக மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர் சிவலிங்கம்
திமுக மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர் சிவலிங்கம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சேலம் : சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த கெங்கவல்லியில் நேற்று (செப் 3) திமுக கிழக்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற திமுக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர் சிவலிங்கம் பேசுகையில், "சேலம் மாவட்டத்தை அதிமுக கோட்டை என்று திமுகவினர் யாரும் இனி சொல்லக்கூடாது. திமுக ஆட்சிக்கு வந்தாலே அரசு அதிகாரிகள், திமுக மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகளுக்கு தோழர்களாகவே இருப்பார்கள். சிலர் வாகனங்களில் மண் அள்ளி செல்கின்றனர். உங்களுக்கு திறமை இருந்தால் ஏரிகளில் மண் ஓட்டிக் கொள்ளுங்கள்.

எஸ்.ஆர் சிவலிங்கம் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

ஆனால் மாட்டிக்கொண்டால் நம்ம கட்சி நம்மை காப்பாற்றவில்லை என சொல்லி புலம்ப வேண்டாம் . அந்த விஷயத்தை புகாராக என்னிடம் கொண்டுவரக் கூடாது. திமுகவினருக்கு நான் எதையும் செய்து தர தயாராக இருக்கிறேன். கட்சியில் இரண்டு பொறுப்புகள் உள்ளதை மாற்றம் செய்வதற்கு கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.

செய்தியாளர்கள் இங்கே இருப்பதால் சில விஷயங்களை மைக்கில் விவரமாக பேச முடியாது. அதிமுக கெங்கவல்லி ஒன்றிய குழு தலைவராக இருந்த பிரியா இப்போது திமுகவில் இணைந்தார். ஆனால் அவர் மீது மீண்டும் திமுகவினரே தொடர்ந்து புகார் செய்ததால், தற்போது திமுகவைச் சேர்ந்த நபர் தான் ஒன்றிய குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் திமுக தான் போட்டியிடும். இங்கு திமுக வேட்பாளர் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற கட்சியினர் உழைக்க வேண்டும். கோஷ்டி பூசல் இல்லாமல் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மீண்டும் கோஷ்டி பிரச்னை ஏற்பட்டால் அவர்களே கட்சியை விட்டு தாமாக ஒதுங்கி கொள்ளுங்கள்" என்று தெரிவித்தார். இந்த கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ சின்னதுரை, பேரூர் செயலர் பாலமுருகன், கெங்கவல்லி டவுன் பஞ்சாயத்து தலைவர் லோகாம்பாள் உட்பட பல திமுக பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க :"சைக்கிள் ஓட்டலாம் வாங்க" - ராகுலுக்கு முதல்வர் ஸ்டாலின் அன்பான அழைப்பு! - mk stalin cycle

ABOUT THE AUTHOR

...view details