தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொன்.மாணிக்கவேல் முன் ஜாமீன் நிபந்தனைகள் தளர்வு - உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு! - PON MANICKAVEL CASE

முன்னாள் ஐ.ஜி பொன்.மாணிக்கவேலுக்கு விதிக்கப்பட்ட முன் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தி உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு
உயர் நீதிமன்ற மதுரை அமர்வு (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 14, 2024, 7:46 PM IST

மதுரை:தமிழக சிலை கடத்தல் பிரிவு ஓய்வு பெற்ற ஐஜி பொன். மாணிக்கவேல். இவர் மீது சிலை கடத்தல் தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் பொன்.மாணிக்கவேலுக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி இருந்தது. அதன்படி நான்கு வார காலம் சென்னை சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என அவருக்கு நீதிபதி நிபந்தனை விதித்தார்.

இந்த நிபந்தனையை தளர்த்தக் கோரி பொன்.மாணிக்கவேல் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, 4 வார நிபந்தனை காலம் முடிவடையாமல் நிபந்தனையை தளர்த்த முடியாது என நீதிபதி தெரிவித்தார்.
இந்தநிலையில் முன் ஜாமின் நிபந்தனைகளைத் தளர்த்தி உத்தரவிட வேண்டும் என முன்னாள் ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் மீண்டும் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதையும் படிங்க:" 'கூலி லிப்' சாப்பிட்டால் இளமையாக இருக்கலா?" - விளம்பரம் குறித்து நீதிமன்றம் கடும் அதிருப்தி!

இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுதாரர், "நீதிமன்றம் பிறப்பித்த நான்கு வார கால நிபந்தனை அடிப்படையில் சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட்டு உள்ளார். எனவே முன்ஜாமின் நிபந்தனைகளை தளர்த்த வேண்டும்" என வாதிட்டார்.

அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி பரத சக்கரவர்த்தி, முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு விதிக்கப்பட்ட முன் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details