சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சோத்துப்பாறை (தேனி) 13, பெரியகுளம் (தேனி), பேரையூர் (மதுரை) பகுதிகளில் தலா 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
விருதுநகர் வத்திராயிருப்பில் தலா 8 செ.மீ மழையும், மஞ்சளாறு (தேனி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) தலா 6 செ.மீ மழையும், புத்தன் அணை (கன்னியாகுமரி), பெரியாறு (தேனி), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), கோடிவேரி (ஈரோடு), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), ஆனைமலை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), எழுமலை (மதுரை), பிளவக்கல் பெரியாறு அணை (விருதுநகர்), அடையாமடை (கன்னியாகுமரி) தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
வட்டமலை நீர்த்தேக்கம் (திருப்பூர்), சுருளக்கோடு (கன்னியாகுமரி), கவுந்தப்பாடி (ஈரோடு), ராஜபாளையம் (விருதுநகர்) தலா 4 செ.மீ மழையும், வால்பாறை PTO (கோயம்புத்தூர்), நம்பியூர் (ஈரோடு), கொடைக்கானல் (திண்டுக்கல்), முக்கடல் அணை (கன்னியாகுமரி), பவானி (ஈரோடு), சின்கோனா (கோயம்புத்தூர்), கோத்தகிரி (நீலகிரி), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு) தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
குமாரபாளையம் (நாமக்கல்), அரண்மனைப்புதூர் (தேனி), PWD வாரப்பட்டி (கோயம்புத்தூர்), கெத்தை (நீலகிரி), ஆழியார் (கோயம்புத்தூர்), மதுக்கரை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), கின்னக்கோரை (நீலகிரி), வைகை அணை (தேனி), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), ஏற்காடு AWS (சேலம்), தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
பொதுப்பணித்துறை மக்கினம்பட்டி (கோயம்புத்தூர்), வெள்ளக்கோயில் (திருப்பூர்), போதானூர் இரயில் நிலையம் (கோயம்புத்தூர்), ஆனைப்பாளையம் (கன்னியாகுமரி), கோயம்புத்தூர்-தெற்கு (கோயம்புத்தூர்), ஆதார் எஸ்டேட் (நீலகிரி), சோலையார் (கோயம்புத்தூர்), ஆண்டிபட்டி (தேனி), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), அவினாசி (திருப்பூர்), பார்வூட் (நீலகிரி), ஏற்காடு (சேலம்), போடிநாயக்கனூர் (தேனி).
கிணத்துக்கடவு (கோயம்புத்தூர்), பாபநாசம் (திருநெல்வேலி), திருமூர்த்தி அணை (திருப்பூர்), மணல்மேடு (மயிலாடுதுறை), பென்னாகரம் (தர்மபுரி), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), பெருந்துறை (ஈரோடு), அணைகெடங்கு (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி), கூடலூர் பஜார் (நீலகிரி), மடத்துக்குளம் (திருப்பூர்), ராமநதி அணைப் பகுதி (தென்காசி), திருமூர்த்தி IB (திருப்பூர்), வீரபாண்டி (தேனி) தலா 1 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை :அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை ஒட்டியும், ஓரிரு இடங்களில் இயல்பை விட மிக அதிகமாகவும் இருந்தது. கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. அதிக பட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 41.5 டிகிரி செல்சியஸ் (5.2 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகம்) பதிவாகியுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 41.4 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34 டிகிரி முதல் 37 டிகிரிசெல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 22 டிகிரி முதல் 29 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 36.6 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று (மே 10), தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.