சென்னை: சென்னை தீவுத்திடலில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுகிறது. இந்த கார் பந்தயத்திற்காக சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனபடி, கார் பந்தயம் நடைபெறும் இடத்தில் உள்ள விஐபி வாயிலில் கொளத்தூர் சரக உதவி ஆணையர் சிவக்குமார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
இந்த நிலையில், பிற்பகல் 1.10 மணி அளவில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, பாதுகாப்பிற்காக இருந்த இடத்திலேயே மயக்கம் அடைந்து விழுந்தார். பின்னர், அவரை மீட்ட சக அதிகாரிகள், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.