திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த கந்திலி பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் (வயது 60) என்பவருக்கு சொந்தமான வீட்டுமனை ஆம்பள்ளி அருகே உள்ளது. இதற்கு அருகில் பிரேம்குமார் (வயது 35) என்பவருக்கும் வீட்டு மனை இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கு இடையே நிலப்பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து பிரேம்குமார் கந்திலி பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரிடம் (வயது 33) தெரிவித்துள்ளார். இவர் அப்பகுதியில் பா.ம.க ஒன்றிய செயலாளராக பணியாற்றி வருகிறார். இதனையடுத்து கோவிந்தராஜ் பிரேம்குமாருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்துள்ளார்.
இதனையறிந்த புஷ்பராஜ் மகன்களான, சிவராமன் மற்றும் சிங்காரவேலன் ஆகிய இருவரும் கோவிந்தராஜிடம் சென்று எங்களுடைய பிரச்சனையில் நீ எதற்கு தலையிடுகிறாய்? உனக்கும் இதற்கு என்ன சம்பந்தம் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தராஜ், அருகில் இருந்த கத்தியை எடுத்து சிங்காரவேலனின் வயிறு மற்றும் முதுகு பக்கத்தில் குத்தியதாக சொல்லப்படுகிறது.