தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே சோழபுரம் காவல் சரகம் அய்யாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோகுல் (25). இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் மருந்தகத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், இவர் கடந்த ஜூன் 12ஆம் தேதி இரவு முதல் மாயமானதாக கூறப்படுகிறது.
இவரின் அலைபேசியையும் தொடர்பு கொள்ளமுடியாத நிலையில், இது குறித்து அவர் பெற்றோர் தம்பிதுரை - ஆனந்த வள்ளி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுலை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், இன்று காலை கோவிலாச்சேரி அருகே உள்ள பழவாற்றங்கரையில் கோகுலின் உடல் எரிந்த நிலையில் சடலமாக கண்டறியப்பட்டுள்ளது.