தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி முத்தம்மாள் (65). இவர்களது மகன் சின்னத்துரை (30). இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளார். ஓய்வு பெற்ற தலையாரியான சண்முகம் சில வருடங்களுக்கு முன் இறந்து விட, முத்தம்மாள் தனது மகனுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முத்தம்மாள் வீடு திறக்கப்படாமல் உள்பக்கமாக பூட்டியே கிடந்துள்ளது. அதனைக் கண்ட அக்கம், பக்கத்தினர் சந்தேகத்தில் வீட்டை திறக்க முயன்றுள்ளனர். ஆனால், வீட்டை திறக்க முடியவில்லை. உடனே இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
இதையும் படிங்க:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 26 பேர் அறிவுரை கழகத்தில் ஆஜர்!
அங்கு தாயும், மகனும் சடலமாக கிடந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் பத்மநாப பிள்ளை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லையால் தாயும், மகனும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல:சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள். சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050, மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104, இணைய வழித் தொடர்புக்கு - 022-25521111, மின்னஞ்சல் help@snehaindia.org அல்லது நேரில் தொடர்புகொள்ள, சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம், சென்னை - 600028.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்