கோயம்புத்தூர்:ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீபால் பகுதியை சேர்ந்த தினேஷ் குமார் (வயது 27), கோயம்புத்தூர் மாவட்டம் தெப்பக்குளம் மைதானம் தியாகராய வீதியில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 3 மகள்கள் உள்ள நிலையில், கடந்த சனிக்கிழமை (பிப்.3) தனது இரண்டாவது மகளான, 3 வயது இமன்ஷு வை ராஜவீதி சவுடம்மன் கோயில் பகுதியில் உள்ள இவரது உறவினரின் வாட்ச் கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக, தண்ணீர் என நினைத்து அங்கு வைத்திருந்த வெள்ளை பெட்ரோலை (White Petrol) குடித்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தினேஷ் குமார், குழந்தையை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.