தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள்" - ஓபிஎஸ் வேண்டுகோள்! - O Panneerselvam - O PANNEERSELVAM

O. Panneerselvam: நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக மத்திய அரசு கடுமையான சட்டங்கள் கொண்டு வரவேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பு
ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பு (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2024, 5:59 PM IST

தேனி:வ.உ.சிதம்பரனாரின் 153வது பிறந்த தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஓ.பன்னீர்செல்வம் பேட்டி (Credit - ETV Bharat Tamil Nadu)

அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழக முதல்வரின் முதலீட்டு ஈர்ப்பு அமெரிக்க பயணம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தமிழக முதல்வர் தற்போது அமெரிக்கா சென்றுள்ளார். அவர் எந்த அளவிற்கு நிதி சேர்க்கிறார் என்பதும், அது எந்த அளவில் தமிழக மக்களுக்கு பயன்படும் என்பதும் நடைமுறைக்கு கொண்டு வந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்" என்றார்.

அதன் தொடர்ச்சியாக நாட்டில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்துவதற்கு மத்திய அரசின் கடுமையான சட்டங்கள் அனைத்து மாநிலங்களுக்கும் கட்டாயம் தேவை" என்று பதிலளித்தார்.

மேலும், தமிழகத்தில் நிகழும் கந்து வட்டி கொடுமைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, "தமிழகத்தில் கந்து வட்டி கொடுமையை ஒழிப்பதற்கு, மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இயக்கமாக மாறி செயல்பட வேண்டும். அப்போதுதான் இந்த கந்து வட்டியை ஒழிக்க முடியும்" என்று கூறினார்.

மேலும் தொடர்ச்சியாக பேசிய அவர், "மத்திய அரசு, தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை என்று தமிழக அரசு கூறி வருகிறது. ஆனால், மத்திய அரசு போதுமான திட்டங்களுக்கு போதுமான நிதியை வழங்கி வருவது என்பதுதான் உண்மை.

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக மத்திய அரசு கடுமையான சட்டங்கள் கொண்டு வரவேண்டும்" என்று தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:நரிக்குறவர், மாற்றுத்திறனாளிகளுக்கு கோட் பட டிக்கெட் இலவசம்.. தூத்துக்குடி விஜய் ரசிகர்கள் கோலாகல கொண்டாட்டம்

ABOUT THE AUTHOR

...view details