தமிழ்நாடு

tamil nadu

மக்களவைத் தேர்தல் 2024: வட சென்னை தொகுதியில், திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி தொடர்ந்து முன்னிலை.. - Lok Sabha Election Results 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 4, 2024, 12:24 PM IST

Updated : Jun 4, 2024, 7:15 PM IST

North Chennai Election results 2024 live updates: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வரும் நிலையில் வட சென்னையில் 15வது சுற்றில், 2,82,225 வாக்கு வித்தியாசத்தில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

சென்னை: வட சென்னை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி போட்டியிட்டுள்ளார். அதேபோல அதிமுக சார்பில் ராயபுரம் மனோவும், பாஜக சார்பில் பால் கனகராஜ் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் அமுதினியும் போட்டியிட்டுள்ளனர்.

வட சென்னை மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்:

  • வட சென்னை மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கையின் 15 சுற்றில், 2,82,225 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இதுவரை அவர் பெற்ற மொத்த வாக்குகள் 4,12,811 பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ 1,30,586 வாக்குகளும், பாஜக வேட்பாளர் 96,554 வாக்குகள் மற்றும் நாம் தமிழர் கட்சி 77,324 வாக்குகளும் பெற்றுள்ளன.
  • 14வது சுற்றின் நிறைவில் 2,67,314 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். தற்போது வரை அவர், 3,90,328 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை தொடர்ந்து அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ 1,23,014இரண்டாம் இடத்திலும், பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் 91,806 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
  • முதல் இரண்டு மற்றும் மூன்றாம் சுற்று முடிவின்படி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 85,276 வாக்குகள் பெற்று 59,297 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
  • மூன்றாம் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் 27,032 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் 8,646 வாக்குகளும் அதேபோல, பாஜக வேட்பாளர் 6,806 வாக்குகளும் அதேபோல நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 5,398 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
  • இரண்டாம் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 30,658 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை தொடர்ந்து, அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ 8499 இரண்டாம் இடத்திலும், பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் 8026 மூன்றாம் இடத்திலும் உள்ளனர். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட அமுதினி 4,835 வாக்குகளும் பெற்றுள்ளார்.
  • முதல் சுற்று முடிவில்திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 27,586 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை தொடர்ந்து, பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் 9,599 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ 8,834 வாக்குகளும் பெற்றுள்ளனர். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட அமுதினி 4,221 வாக்குகளும் பெற்றுள்ளார்.

இதையும் படிங்க:மக்களவைத் தேர்தல் 2024: மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் முன்னிலை.. - Central Chennai Election Result

Last Updated : Jun 4, 2024, 7:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details