கோயம்புத்தூர்:தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் (ஏப்ரல் 19) நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தல் விதிமுறைகள் படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மாலையுடன் பிரசாரம் முடிவடைகிறது. இதனையொட்டி, அரசியில் கட்சியினர் தங்களது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று அன்னூரில் நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளரும் மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் தலைமையில் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று பாஜகவினர் வாக்கு சேகரித்தனர்.பேரணி அன்னூர் பேருந்து நிலையத்தில் தொடங்கி குருக்கிலியாம்பாளையம், ஜெ.ஜெ நகர், ஜீவா நகர், பொகலூர், குமரன் குன்று வழியாக மேட்டுப்பாளையம் சென்றனர்.