தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு: மேலும் 4 பேர் கைது செய்த என்ஐஏ! - NIA raid in coimbatore

coimbatore car blast case: கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தமிழகம் முழுவதும் 21 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய சோதனையில், கோவையில் நான்கு பேர் கைது செய்துள்ளனர்.

NIA inquiry about coimbatore car blast case
கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 12, 2024, 7:40 AM IST

கோயம்புத்தூர்: கோவை, உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் குண்டு வெடிப்பு காரணமாக தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக சென்னை, கோவை உட்பட சுமார் 21 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (NIA - National Investigation Agency) நேற்று (பிப்.11) அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இச்சோதனையில் நான்கு பேரை கைது செய்த தேசிய புலனாய்வு அதிகாரிகள் அவர்களிடமிருந்து 6 மடிகணினிகள், 25 செல்போன்கள், 36 சிம் கார்டுகள், ஹார்ட் டிஸ்க்குகள் (Hard Disks) உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சென்னை மற்றும் கோவை அரபி கல்லூரிகள் மூலம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆள் திரட்ட முயற்சித்து இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக, என்ஐஏ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கின் அடிப்படையில், நேற்று தமிழகம் முழுவதும் 21 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் கோவையில் மட்டும் 11 இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர். இது தவிர சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை உட்பட பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவையில் மேற்கொண்ட சோதனையில், ஆறு லேப்டாப், 25 மொபைல் போன்கள், 36 சிம் கார்டுகள், மற்றும் ஹார்ட் டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆட்கள் திரட்டியது, இளைஞர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாத இயக்கங்களில் இணைக்கும் முயற்சியில் ஈடுபடுத்தியது தொடர்பாக நான்கு பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்; நாடாளுமன்றத் தொகுதிகளில் 3 நாட்கள் திமுக பரப்புரைக் கூட்டம்!

ABOUT THE AUTHOR

...view details