திருநெல்வேலி: பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் மூன்று நாட்களுக்கு கன்னியாகுமரி கடற்பகுதியில் அமைந்திருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானம் செய்ய உள்ளார். இதனை முன்னிட்டு கடற்படை காவல்படை, தமிழக காவல்துறை என சுமார் 4,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நெல்லை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் (Credits: ETV Bharat Tamil Nadu) மேலும், தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதாலும், இறுதி மற்றும் ஏழாம் கட்ட தேர்தல் நடைபெறுவதாலும் பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தை தடை செய்ய வேண்டும் என பல்வேறு கட்சியினர் இந்திய தேர்தல் ஆணையம், நீதிமன்றம் போன்றவற்றை நாடி உள்ளனர். இந்த நிலையில், திருநெல்வேலி காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
“தமிழர்களை திருடர்கள் என இழிவுபடுத்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருவதைக் கண்டித்தும், தேச பிதா மகாத்மா காந்தி சினிமா மூலமே பொதுமக்களுக்கு தெரிய வந்தார் என தவறான கருத்துக்களை பரப்பிய பிரதமர் மோடியைக் கண்டித்தும்” நெல்லை கொக்கிரகுளத்தில் அமைந்துள்ள காங்கிரஸ் கட்சி அலுவலக மாடியில் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆர்ப்பாட்டத்தைக் கைவிடச் செய்தனர்.
இதையும் படிங்க:புதுச்சேரியில் இளைஞர் அடித்துக் கொலை; உறவினர்கள் சாலை மறியல்! - Youth Died In Puducherry