தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கருணாநிதி பிறந்தநாள்; சென்னையில் ‘கலைஞர் நினைவிடத்தில்’ மு.க.ஸ்டாலின் மரியாதை! - Karunanidhi birthday - KARUNANIDHI BIRTHDAY

Karunanidhi Birth Anniversary: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாளை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

கருணாநிதி பிறந்தநாள் - கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை
கருணாநிதி பிறந்தநாள் - கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 3, 2024, 10:57 AM IST

சென்னை: முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழாவை ஒட்டி, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி திருவுருவச் சிலைக்கு இன்று மரியாதை செலுத்தினார்.

அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களில் மலர்வளையம் வைத்து, மலர்தூவி அவர் மரியாதை செலுத்தினார். மேலும், 'கலைஞர் நூற்றாண்டு நிறைவு' சிறப்பு மலர்கள் வெளியிட்டு, சிறப்பு புகைப்படக் கண்காட்சி மற்றும் குறும்படத்தை பார்வையிட்டார். அதேபோல, சென்னை அண்ணா சாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் சிலைக்கும் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது, நூற்றாண்டு விழா மலர் வெளியிட்டார். பின்னர், கலைஞர் வரலாறு புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். 'கலைஞர் நூற்றாண்டு நிறைவு நினைவலைகள்' என்ற பெயரில் இந்த புகைப்பட கண்காட்சி அமைக்கபட்டுள்ளது. இதில் கலைஞரை நினைவு கூறும் வையில் அவரது அரசியல் மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் புகைபடமாக அமைக்கபட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, கருணாநிதியின் வரலாற்று நினைவு குறும்படத்தினை வெளியிட்டு பார்வையிட்டார்.

கருணாநிதி பிறந்தநாள் விழாவை ஒட்டி, கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை (Credits - ETV Bharat Tamil Nadu)

அவருடன் எம்.பி-கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, சேகர்பாபு, கே.என்.நேரு மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.அறிஞர் அண்ணா நினைவிடத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

அதனையடுத்து சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கலைஞர் திருவுருச்சிலைக்கு முதல்வர் மரியாதை செலுத்தினார். அடுத்தடுத்து முரசொலி அலுவலகத்தில் உள்ள கலைஞர் உருவ சிலைக்கும், அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் உருவ சிலைக்கு முதல்வர் மரியாதை செலுத்தினார். முன்னதாக, சென்னை கோபாலபுரம் இல்லத்தில், அலங்கரித்து வைக்கப்பட்ட கருணாநிதி உருவபடத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

இதேபோல், கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101வது பிறந்தநாளையொட்டி, சென்னை சிஐடி காலனியில் உள்ள திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி இல்லத்தில் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.Conclusion:

இதற்கிடையே, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் முழுமையாக வென்று கருணாநிதிக்கு காணிக்கை செலுத்துவோம் என கருணாநிதி நூற்றாண்டு விழா ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நாளை (செவ்வாய்க்கிழமை) மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு ஆண்டும் திமுகவினரால், கருணாநிதியின் பிறந்த நாள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில், இந்தாண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், எளிமையான முறையில் கருணாநிதியின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் கருணாநிதியின் 18 ஆண்டு கால ஆட்சியில், பல்வேறு சமூக சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. அவற்றில், பெண்களுக்கு சொத்துரிமை உள்ளிட்ட பல சட்டத்திருத்தங்களை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, இளம் தலைமுறையினருக்கு இவரது சாதனைகளை எடுத்துரைக்கும் விதமாக, 10ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தமிழ் மற்றும் கலைத்துறையில் செய்த பணிகள் குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், 'பன்முகக் கலைஞர்' என்ற தலைப்பில் புதிய பாடம் ஒன்றை நடப்பாண்டில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கட்டாய ஓய்வு; 2 ஆயிரம் தொழிலாளர்களின் நிலை என்ன? - Manjolai Estate Issue

ABOUT THE AUTHOR

...view details