தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"திமுகவினர் மீதான வழக்குகளுக்கு ஒரு மாதத்தில் தீர்வு காணப்படும்".. அமைச்சர் ரகுபதி! - Minister Regupathy

Minister S.Regupathy: திமுகவினர் மீதான வழக்குகளுக்கு ஒரு மாதத்தில் தீர்வு காணப்படும் என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் எஸ்.ரகுபதி
அமைச்சர் எஸ்.ரகுபதி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2024, 11:03 PM IST

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாநகர திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், மாநகர செயலாளர் செந்தில், சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன் உள்ளிட்ட திமுக மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அமைச்சர் ரகுபதி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

பின்னர், நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது, “தன் மீது வழக்கு இருந்ததால், வெளிநாடு செல்ல முடியவில்லை என்று முன்னாள் எம்எல்ஏ கவிதைப்பித்தன் வருத்தத்துடன் பேசினார். அவர் மீது மட்டுமல்ல, என் மீதும் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன. திமுகவினர் மீதான வழக்கு விவரங்களைத் திரட்டி, 10 லட்சம் வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.

காவல் துறையினர் வழக்கு விவரங்களை முறையாக கொடுக்காததால்தான், கட்சியினர் மீது சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. திமுகவினர் மீதுள்ள வழக்குகள் குறித்த பட்டியலைத் தந்தால், ஒரு மாதத்துக்குள் அவற்றுக்குத் தீர்வுகாணப்படும்.

யார் தவறு செய்திருந்தாலும் அவர்களை தண்டிக்கின்ற முதல் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான். என்னை பொறுத்தவரை தமிழக முதலமைச்சர் இந்த பொறுப்பு வழங்கியுள்ளது திமுக நிர்வாகிகள் மற்றும் அடிமட்ட தொண்டர்களுக்கு உதவுவதற்காகவே நான் இந்த பொறுப்பை பயன்படுத்திக் கொள்கின்றேன். நான் யாரிடமும் எப்பொழுதும் கோபப்பட மாட்டேன்.

கட்சி நிர்வாகிகள் எப்பொழுதும் என்னை சந்தித்து கோரிக்கை வழங்கினால் உடனடியாக அது குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு தயாராக இருக்கின்றேன். எங்கள் கட்சியில் குற்றவாளிகளுக்கு இடம் கொடுக்க மாட்டோம். தெரிந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்கக்கூடிய இயக்கம் திமுக” இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், துணை மேயர் லியாகத் அலி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் வட்டக் கழக செயலாளர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:கட்சியில் சேர்ந்து 6 மாசமாச்சு.. அண்ணே சரிதானே? - மேடையில் ஓப்பனாக பதவி குறித்து பேசிய விஜயதாரணி!

ABOUT THE AUTHOR

...view details