திண்டுக்கல்:பழனியில் ஆகஸ்ட் மாதம் பிரமாண்டமாக நடைபெற உலக முருக பக்தர்கள் மாநாட்டின் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாநாட்டின் ஏற்பாடுகள் குறித்து தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அருள்மிகு பழனியாண்டவர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டார். பின் ரோப்கார் மூலம் மலைக்கோயிலுள்ள தண்டாயுதபாணி சுவாமியைத் தரிசனம் செய்தார். தொடர்ந்து, கோயிலில் செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகளையும்,,பிற பணிகளையும் அமைச்சரும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன், செயலர் மணிவாசகம் ஆகியோரும் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
பழனியில் நடைபெற உள்ள உலக முருக பக்தர்கள் மாநாட்டில் 3 மாநில முதல்வர் பங்கேற்பதாக தகவல்! - ULAGA MUTHAMIL MURUGA MAANAADU - ULAGA MUTHAMIL MURUGA MAANAADU
Minister PK Sekar Babu: பழனியில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள உலக முத்தமிழ் முருக பக்தர்கள் மாநாடு குறித்து தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இந்த மாநாட்டில் மூன்று மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக முத்தமிழ் முருக மாநாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளும் அமைச்சர் சேகர்பாபு (credit-ETV Bharat Tamil Nadu)
Published : May 11, 2024, 3:23 PM IST
இந்த மாநாட்டில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும், உலகம் முழுவதும் இருந்து முருக பக்தர்களும் பங்கேற்கும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.