தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாயிகளுக்கு தேவைக்கு ஏற்ப பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது...அமைச்சர் பெரியகருப்பன் விளக்கம்! - PERIYAKARUPPAN

விவசாயிகளுக்கான திமுக ஆட்சியில் ஒரு சில அரசியல் தலைவர்கள் ஆதாயம் தேடுகின்ற வகையில், உண்மைக்கு புறம்பாக, அவதூறு செய்திகளை பரப்புகின்றனர். அவற்றையெல்லாம் பொதுமக்கள் புறம் தள்ள வேண்டும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பெரியகருப்பன்
அமைச்சர் பெரியகருப்பன் (Credits - KR Periakaruppan X Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2024, 6:35 PM IST

சென்னை :விவசாயிகளுக்கான திமுக ஆட்சியில் ஒரு சில அரசியல் தலைவர்கள் ஆதாயம் தேடுகின்ற வகையில், உண்மைக்கு புறம்பாக, அவதூறு செய்திகளை பரப்புகின்றனர். அவற்றையெல்லாம் பொதுமக்கள் புறம் தள்ள வேண்டும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், " சில அரசியல் தலைவர்கள் ஆதாயம் தேடும் வகையில், வெளியிட்டுள்ள அர்த்தமற்ற அவதூறு செய்திகளில் எள்ளளவும் உண்மை இல்லை. விவசாயிகள் அந்ததந்த பருவ காலங்களில் பயிர் சாகுபடி செய்ய ஏதுவாக மாநில தொழில்நுட்ப குழுவால் அங்கீகரிக்கப்பட்ட கடனளவிற்கு (Scale of Finance) உட்பட்டு விவசாயிகளின் தேவைகளுக்கு ஏற்பவும் மற்றும் NABARD, RBI வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டும் பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது.

பயிர்க்கடன் :கடந்த 2021-2022ம் ஆண்டில் 14,84,052 விவசாயிகளுக்கு ரூ.10,292 கோடி பயிர்க்கடனும், 2022-2023ம் ஆண்டில் 17,43,817 விவசாயிகளுக்கு ரூ.13,442 கோடி பயிர்க்கடனும், 2023-2024ம் ஆண்டில் 18,36,345 விவசாயிகளுக்கு ரூ.15,542 கோடி பயிர்க்கடனும் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் கடந்த ஏப் 1 முதல் நவ 6 வரை 8,62,544 விவசாயிகளுக்கு ரூ.7,666 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டை விட ரூ.450 கோடி கூடுதலாகும். சென்ற ஆண்டு இதே நாள் வரை ரூ.7,216 கோடி கடன் வழங்கப்பட்டது.

பயிர்க்கடன்கள், மத்திய கூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாயிகளின் சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்பட்டு வழங்கப்படுகிறது. மேலும், விவசாயிகள் தங்கள் வீட்டிலிருந்தே பயிர்க்கடன் பெற ஏதுவாக மொபைல் செயலி (Online Mobile App) வசதி அறிமுகப்படுத்தப்பட்டு விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல, பயிர்க்கடன்களை குறித்த காலத்தில் திருப்பி செலுத்திடும் விவசாயிகளிடம் வட்டி வசூலிக்கப்படுவதில்லை. அரசே அவ்வட்டி தொகையை ஏற்றுக் கொள்கிறது. அதேபோன்று, விவசாயிகளுக்கு தங்கு தடையின்றி உரம் அவர்களின் தேவைக்கேற்ப வழங்கப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க :நாளை தமிழக பள்ளிக் கல்வி துறையின் ஆய்வு கூட்டம்; நிறைவேறுமா ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு..?

மேலும், தமிழ்நாட்டில் 4,456 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இச்சங்கங்கள் மூலம் அந்தந்தப் பகுதிகளில் உள்ள விவசாயிகள், குறு, சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான பயிர்க்கடன், நகைக்கடன், சுய உதவிக்குழு கடன், தாட்கோ, டாம்கோ, டாப்செட்கோ என 26 வகையான கடன்கள் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இச்சூழ்நிலையில், ஒரு சில அரசியல் தலைவர்கள் ஆதாயம் தேடுகின்ற வகையில் உண்மைக்கு புறம்பாக, அர்த்தமற்ற, அவதூறு செய்திகளை பரப்புவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அவற்றை எல்லாம் பொதுமக்கள் புறம் தள்ள வேண்டும்" என அமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details