தமிழ்நாடு

tamil nadu

சென்னையில் பெண் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு 'பிங்க் ஆட்டோ' - அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு! - TN Assembly Session 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 22, 2024, 9:02 AM IST

Pink Auto for Women in TN: சென்னையில் 200 பெண் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஜிபிஎஸ் உடன் பிங்க் ஆட்டோக்கள் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட 32 அறிவிப்புகளை சட்டப்பேரவை மானிய கோரிக்கை மீதான விவதாத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டார்.

பிங்க் ஆட்டோ, அமைச்சர் கீதா ஜீவன் புகைப்படம்
பிங்க் ஆட்டோ, அமைச்சர் கீதா ஜீவன் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: நடப்பாண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 20ஆம் தேதி துவங்கியது. முதல் நாள் பேரவையில், மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் மற்றும் குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு, பேரவை அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, நேற்று (ஜூன் 21) மானிய கோரிக்கை மீதான விவதாம் நடைப்பெற்றது. அப்போது, அமைச்சர்கள் தங்கள் துறையின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர்.

அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்ட அறிவிப்புகள்:

தமிழக சட்டபேரவையில் சமூக நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாத்தில் பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்க தமிழக அரசு ரூ.2 கோடி செலவில், 200 பிங் ஆட்டோக்கள் (Pink Auto for Women) இயக்கப்படும் அறிவிப்பு உள்ளிட்ட 32 புதிய அறிவிப்புகளை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டார். அவை பின்வருமாறு:-

  • "சென்னை மாநகரில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாகவும் அரசு மானியமாக தலா ரூ.1 லட்சம் விதம் 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் வழங்கி, இரண்டு கோடி ரூபாய் செலவில் 200 இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் (Pink Auto) இயங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • சமூக நலத்துறையின் மூலம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களில் பயன் பெறுவதற்காக வரையறுக்கப்பட்டுள்ள தகுதிகளில் ஒன்றான குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.72 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.
  • முதியோர் ஆரோக்கியத்துடன் சிறப்பாக வாழ, மாநில அரசு மானியம் பெறும் 23 முதியோர் இல்லங்கள் மற்றும் 44 ஒருங்கிணைந்த வளங்கங்களில் உள்ள 2020 முதியோர் பயனடையும் வகையில் 40.20 லட்சம் ரூபாய்க்கு மதிப்பில் யோகா, முச்சுப்பயிற்சி, தியான பயிற்சி போன்றவை தகுதி வாய்ந்த பயிற்றுநர்கள் மூலம் பயிர்விக்கப்படும்.
  • கைம்பெண், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்களின் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 200 பயனாளிகளுக்கு சுயதொழில் செய்ய தலா ரூ.50 வீதம், 1 கோடி ரூபாய் மானியம், கைம்பெண் முதல் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் மூலம் வழங்கப்படும். மேலும், ரூ.50 லட்சம் மதிப்பில் விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்தப்படும்.
  • தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனத்தின் மூலம் திருவள்ளூர், கோயம்புத்தூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி மற்றும் மதுரை ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 6 அரசு பணிபுரி மகளிர் விடுதிகள் ரூ.1 கோடி செலவில் மறுசீரமைக்கப்படும்.
  • தனியாரால் நடத்தப்படும் முதியோர் இல்லங்கள் மற்றும் பணிபுரியும் மகளிர் விடுதிகள் பதிவு மற்றும் உரிமம் பெறும் நடைமுறை எளிய ஆளுமை திட்டம் மூலம் எளிதாக்கப்படும்.
  • அரசு நிறுவனங்களில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் பாதுகாப்பை கண்காணிக்க குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் இயக்குநர் ஆற்றில் ஒருங்கிணைந்த சிறப்பு கண்காணிப்பு மையம் அமைக்கப்படும்.
  • தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 54 ஆயிரத்து 449 குழந்தைகள் மையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 5 ஆயிரத்து 590 குழந்தைகள் மையங்களில், ரூ.55.90 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார்.
  • அனைத்து அரசு மற்றும் தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ரூ.62.83 லட்சம் மதிப்பீட்டில் குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், 2006 தொடர்பான விழிப்புணர்வு பலகைகள் அமைக்கப்படும்" உள்ளிட்ட அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

இதையும் படிங்க: மீண்டும் மீண்டும் அறுந்த வடம்.. 3 மணி நேரத்தில் 500 மீட்டர் மட்டுமே நகர்ந்த தேர் - நெல்லையப்பர் தேரோட்டத்தில் நடப்பது என்ன?

ABOUT THE AUTHOR

...view details