தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தமிழகத்தில் இரு தடுப்பணைகள் 2 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும்"- அமைச்சர் துரைமுருகன்! - tamil nadu assembly session

minister durai murugan: தமிழகத்தில் அடுத்த 2 ஆண்டுகளில் இரண்டு தடுப்பணைகளை கட்டி முடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன் (credit - Etv Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 24, 2024, 7:53 PM IST

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஜெயசங்கரன், ஆத்தூர் பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றியம் வில்வனூரில் உள்ள வசிஷ்ட நதியின் குறுக்கே தடுப்பணை அமைக்க அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினார்.

வசிஷ்ட நதி தடுப்பணை: இதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வில்வனூரில் உள்ள வசிஷ்ட நதியின் குறுக்கே தடுப்பணை அமைப்பதற்கு முதல் நிலை ஆய்வு செய்து தடுப்பணை அமைக்க ஏதுவாக உள்ளது.

நிலத்தடி நீர் உறிஞ்சல் வகைப்பாட்டில் அதி நுகர்வு பகுதியாகவும், நிலத்தடி நீர் செரிவூட்டும் மண்டலத்தில் அமைந்துள்ளதால் விரிவான கள ஆய்வு செய்து மதிப்பீடு தயாரிக்கப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் நிதி நிலைமைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

பட்டாம்பாக்கம் தடுப்பணை:அதன் தொடர்ச்சியாக, பண்ருட்டி தொகுதி பட்டாம்பாக்கம் அருகே தடுப்பணை வேண்டும், தடுப்பணை இல்லாததால் 5 பேர் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், தடுப்பணை இல்லாததால் 5 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக கூறுவது ஆச்சரியமாக உள்ளதாகவும், தங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் எனவும் கூறினார்.

மேலும், தமிழகத்தில் அடுத்த 2 ஆண்டுக்குள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் குறிப்பிடும் அனைத்து தடுப்பணைகளையும் கட்டி முடிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

தோவாளை கால்வாய்: தொடர்ந்து பேசிய அமைச்சர் துரை முருகன், கன்னியாகுமாரி மாவட்டத்தில் தோவாளை கால்வாயில் டிசம்பர் மாதம் உடைப்பு ஏற்பட்ட நிலையில் 1.4 கோடி நிதி ஒதுக்கிடு செய்து நிரந்தர உடைப்பு ஏற்படாத வண்ணம் சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முழுவீச்சில் பணி முடிக்கப்பட்டு 20 நாட்களுக்குள் தோவாளை கால்வாய்க்கு தண்ணீர் வழங்கப்படும் என்றார்.

இதையும் படிங்க:சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details