தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆளுநருக்கு பாடம் எடுத்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி! நடந்தது என்ன? - MINISTER ANBIL MAHESH

"சரஸ்வதியை வணங்கிவிட்டு படித்தால் அறிவு பெருகும்" என மாணவர்களிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதற்கு, அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.

ஆளுநர் ரவி மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ்
ஆளுநர் ரவி மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் (Credit - Anbil Mahesh X and ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2024, 7:19 PM IST

சென்னை:தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு சென்றார். அங்கு அவர் மாணவ- மாணவிகள் மத்தியில் உரையாற்றினார். அப்போது "இனிவரும் காலங்களில் படிக்கும் மேஜையில் கடவுள் சரஸ்வதியின் புகைப்படத்தை வைத்து வணங்கி விட்டு, படித்தால் நிச்சயம் அறிவு பெருகும்" என்று அறிவுறுத்தினார்.

இப்பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் ஆளுநர் பேசியதை குறிப்பிட்டு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தனது எக்ஸ் பதிவில் தெரிவித்து இருப்பதாவது,"அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 51A(h) பிரிவில் “It shall be the duty of every citizen of India to develop scientific temper, humanism and the spirit of inquiry and reform" என வரையறுத்துள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் எக்ஸ் பதிவு (Credit - Anbil Mahesh X)

இதையும் படிங்க:'திராவிடம்' என்ற சொல் எப்படி வந்தது? - தமிழ்ப் பேராசிரியர் சீனிவாசன் அளித்த வரலாற்று விளக்கம்!

அறிவியல் சார்ந்த சிந்தனைகளை மாணவர்களிடம் வளர்ப்பதுதான் நமது கடமையாக இருக்க வேண்டும்" என அரசியலமைப்புச் சட்டம் சொல்லும் இந்திய குடிமகனின் கடமையை எக்ஸ் பதிவில் எடுத்துரைத்துள்ளார். ஏற்கனவே ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரியை விட்டு பாடப்பட்டது சர்ச்சைக்குயானது.

இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து இருந்தநிலையில், தற்போது பள்ளி மாணவ- மாணவிகள் மத்தியில் உரையாற்றியது பேசு பொருளாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details