திருச்சி:கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, திமுக மாவட்ட மாநகர இளைஞரணி சார்பில், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் வரகநேறி பகுதியில் கலைஞர் நூலகம் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
இதில், திருச்சி மாவட்டத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் அரசுப் பள்ளியில் பயின்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக கைபேசி வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, “இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் சொன்ன ஒரே வார்த்தை நீட் தேர்வை ஒழிப்பது. நீட் தேர்வு ஏழை மாணவ, மாணவிகளுக்கு எதிர்ப்பான ஒரு திட்டம். உடனடியாக அதனை ஒழித்துவிட வேண்டும் என கூறுகின்றனர்.