சென்னை: நீதிபதிகள் ஓய்வுக்கு பின் அவர்களை தற்காலிக நீதிபதிகளை நியமிக்க ஏதுவாக, புள்ளி விவரங்களை கடைபிடிக்க பதிவுத்துறைக்கு உத்தரவிடக்கோரி வி.பி.ஆர் மேனன் என்பவர் கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை உய ர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், “சென்னை உயர் நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 75. தற்போது 66 நீதிபதிகள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். 2025ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் 13 பேர் ஓய்வுபெற உள்ளனர். அதனால், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை குறைவதற்கு பதிலாக அதிகரித்து வருகிறது.
மேலும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 65ஆகவும், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 62 ஆகவும் உள்ளது. நீதிபதிகளுக்கான ஓய்வு வயது நிர்ணயம் செய்வது என்பது பல ஆண்டுகளாக அவர்கள் பெற்ற சட்ட அனுபவங்களை, வயதை காரணம் கூறி நிறுத்துவதற்கு சமமாகும்.