தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வங்கக்கடலில் உருவானது ரீமால் புயல்! - வானிலை மையம் எச்சரிக்கை! - Remal cyclone - REMAL CYCLONE

Chennai Meteorological Centre: ரீமால் புயலானது வடக்கு நோக்கி நகர்ந்து தீவிர புயலாக வலுவடைந்தது எனவும், நாளை நள்ளிரவு சாகர் தீவு மற்றும் கேபுபாரா இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Remal
ரீமால் புயல் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 25, 2024, 9:16 PM IST

சென்னை: மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து, மாலை 5.30 மணி அளவில் ரீமால் புயலாக வலுவடைந்தது.

இது வங்கதேசத்தின் கேபுபாராவிற்கு தென் கிழக்கே சுமார் 360 கி.மீ தொலைவிலும், மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகளுக்கு தென்கிழக்கே சுமார் 350 கி.மீ தொலைவிலும், மேற்கு வங்கத்தின் கேனிங்கிற்கு தென்கிழக்கே 390 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

தொடர்ந்து, ரீமால் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து நாளை காலை வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக் கடலில் தீவிர புயலாக வலுவடைய வாய்ப்புள்ளது. நாளை நள்ளிரவு வங்கதேசம் மற்றும் அதை ஒட்டிய சாகர் தீவு மற்றும் கேபுபாரா இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது.

கரையைக் கடக்கும் பொழுது மணிக்கு 110 - 120 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 135 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் குறைய வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்! - REMAL Cyclone Effects

ABOUT THE AUTHOR

...view details