சென்னை: நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாப்பட்டது. தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு தான் நம் அனைவரின் நினைவுக்கு வரும். ஒருநாள் கொண்டாட்டத்திற்கு பட்டாசு வெடித்தாலும், அதன் காரணமாக ஒலியும், காற்றும் மாசு ஏற்படுகிறது.
காற்று, ஒலி மாசுவை குறைக்கும் விதமாக, தீபாவளி பண்டிகை தினத்தன்று பொதுமக்கள் பட்டாசு வெடிக்கும் நேரங்களில் நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது வருகிறது.
இதையடுத்து தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்க காலை 6:00 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவை கடைப்பிடிக்குமாறு காவல் துறை பொதுமக்களை அறிவுறுத்தி வருவதுடன், நீதிமன்ற உத்தரவை மீறும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.