மதுரை: மதுரையில், “ அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றி வரும் 3 பெண் ஆசிரியர்களுக்கு பள்ளி தாளாளர் சேத் டேனிராஜ் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்து உள்ளார். தாளாளர் சேத் டேனியல்ராஜ், தன் அறைக்கு பெண் ஆசிரியர்களை தனித்தனியே வரச் சொல்லி, Teaching Aid காட்டச் சொல்வதும், அதில் பிழை இருந்தால் தாளாளர் சேத் டேனிராஜ் தன் மடியில் Chart-ஐ வைத்து பிழை திருத்துமாறும், Chart-கள் அனைத்தையும் தரையில் போட்டு ஒவ்வொன்றையும் குனிந்து எடுத்துக் கொடுக்கச் சொல்லுவது போன்ற தொடர் தொந்தரவு செய்வதை வழக்கமாக கொண்டு உள்ளார்.
மேலும், பள்ளி ஆசிரியர்கள் பெறும் மாதச் சம்பளத்தில் 8.5 சதவீதம் பள்ளி நிர்வாகத்திற்கு தொடர்ந்து கட்டயாப்படுத்தி வாங்கி, Society வாயிலாக கடன் பெற்று, அதை தாளாளராகிய தன்னிடம் தர வேண்டும் என்றும் கட்டாயப்படுத்துகிறார்” என பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான மூன்று பெண் ஆசிரியர்களும் தல்லாகுளம் காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி 14 அன்று புகார் அளித்துள்ளனர்.