தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராக்கெட் ராஜாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி - உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு! - ROCKET RAJA BAIL CASE - ROCKET RAJA BAIL CASE

Tirunelveli Rocket Raja Anti Bail Case: “திருநெல்வேலி வன்முறை அதிகம் நடக்கும் பகுதி, மனுதாரர் மீதான வழக்குகளில் சில, வகுப்புவாத மோதல் சம்பந்தப்பட்டவை. எனவே மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்குவது சரியாக இருக்காது” என கூறிய நீதிபதி திருநெல்வேலியைச் சேர்ந்த ராக்கெட் ராஜாவின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

high-court-madurai-bench-dismissed-anti-bail-plea-of-rocket-raja-from-tirunelveli
திருநெல்வேலியைச் சேர்ந்த ராக்கெட் ராஜா முன் ஜாமீன் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து மதுரை ஐக்கோர்ட் உத்தரவு..

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 18, 2024, 9:43 PM IST

மதுரை:திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ராக்கெட் ராஜா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "திருநெல்வேலியில் குறிப்பிட்ட சமுதாய மக்களைக் கொலை செய்யத் திட்டமிட்டதாக வீடியோ வெளியான விவகாரத்தில், பிளாக் ஜாக்குவார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், என்னையும் அந்த வழக்கில் போலீசார் சேர்த்துள்ளனர். எனக்கும், அந்த சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை. எனவே, எனக்கு முன்ஜாமீன் அளித்து உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, ஏற்கனவே கைதான ஜேக்கப், “மனுதாரரின் பெயரை தனது உடலில் பச்சை குத்தியுள்ளார். மனுதாரர் மீது ஏற்கனவே 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போதைய வழக்கில் மனுதாரர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கி மற்றும் ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடவடிக்கைகள் அமலில் உள்ளன. நெல்லை மாவட்டம் வன்முறை அதிகம் நடக்கும் பகுதி. மனுதாரர் மீதான வழக்குகளில் சில, வகுப்புவாத மோதல் சம்பந்தப்பட்டவை. எனவே மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்குவது சரியாக இருக்காது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:ஈழத்தமிழ்ப் பெண்ணுக்கு வாக்குரிமையா? - திருச்சி ஆட்சியர் கூறிய விளக்கம் என்ன? - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details