ராமநாதபுரம் : மதுரை மாவட்டத்தில் உள்ள பிரிஸ்ட் சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வரும் மாணவர் ஜான் பெனடிக்ட். இவர் தனது நண்பர்களுடன் திருப்பாலைக்குடியில் ஒரு வழக்கு விசாரணைக்காக சென்றிருக்கிறார்.
வழக்கு விசாரணை முடிந்த பிறகு, இவருடன் வந்த நண்பர்கள் மதுபானம் குடிக்கலாம் என எண்ணி திருப்பாலைக்குடி அருகில் மணக்குடி கிராமத்தில் உள்ள அரசு மதுபானக் கடைக்கு மது குடிக்கச் சென்றுள்ளனர். அப்போது நண்பர்களுடன் இவரும் சென்றுள்ளார்.
மதுப்பழக்கம் இல்லாத ஜான் அந்த மதுபானக் கடை பாரில் கூல்டிரிங்ஸ் வாங்கி குடித்திருக்கிறார். குடித்த 10 நிமிடத்தில் ஜான்க்கு தலைச்சுற்று ஏற்பட்டும், கடுமையான வயிற்று வலி ஏற்பட்டும் வாந்தி எடுத்திருக்கிறார். உடனடியாக சுதாரித்த அவர், அந்த கூல்டிரிங்ஸ் பாட்டிலில் தேதியை பார்த்தபோது கூல்டிரிங்ஸ் காலாவதியாகி 40 நாட்கள் ஆனது தெரியவந்தது.
உடனடியாக முதலுதவி சிகிச்சைக்காக அருகில் இருந்த திருப்பாலைக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஜான் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
இதையும் படிங்க :உங்கள் வீட்டு Electric Kettle பழுதடைந்து கிடைக்கிறதா? அப்ப, இது தான் காரணம்!