கரூர் :தென்காசி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர் 45 வயதான நபர். இவருக்கு 42 வயதில் மனைவியும், 6 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். இவர்கள் கடந்த ஏழு வருடங்களாக கரூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வசித்து வந்துள்ளனர். 45 வயதான இவர் கரூரில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் ஏற்றுமதி நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் இவர் ஆறுமாத கர்ப்பிணியான தனது மனைவியை ரத்தப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது கணவன் - மனைவி இருவரும் ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். மருத்துவர்கள் அறிவுறுத்தலின் படி, இருவரும் ரத்தப் பரிசோதனை செய்துள்ளனர். ரத்தப் பரிசோதனை முடிவானது கணவன்- மனைவி இருவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கணவன்- மனைவி இருவரது ரத்தத்திலும் எச்ஐவி நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனால் மணமுடைந்த இவர், இன்று( நவ 9) அதிகாலை தனது மனைவி மற்றும் மகளை கொலை செய்துவிட்டு, தானும் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதையும் படிங்க :இன்ஸ்டாகிராமில் 4 நாட்களே பழக்கம்.. ட்ரிப்-க்கு சென்ற 16வயது சிறுமி பரிதாபமாக பலி!