தஞ்சாவூர்:கேரள மாநிலம் வயநாடு மலை பகுதியில்,கடந்த ஜூலை 30 ஆம் தேதி ஏற்பட்ட பெரும் நிலச்சரிவு மற்றும் கனமழை காரணமாக பெருவெள்ளம் பாதிப்பில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். எண்ணற்ற குடியிருப்புகள், கட்டிடங்கள் மண்ணுக்குள் மண்ணாக புதைந்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், இந்த பெரும் துயரில் இருந்து அங்குள்ள மக்களை காக்கும் பொருட்டு, கும்பகோணம் அன்பு மருத்துவமனை நிர்வாகம், ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில், ஆன்டிபயாடிக், சளி, இருமல், காய்ச்சலுக்கு தேவையான மருந்து மாத்திரைகள், சிரப்புகள் வாந்தி வயிற்றுப்போக்கிற்கான தடுப்பு மருந்துகள், வைட்டமின் மாத்திரைகள் என ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான மருத்துவப் பொருட்களும், பிஸ்கெட் பாக்கெட்டுகள், ரஸ்க் பாக்கெட்டுகள், கடலை மிட்டாய் பாக்கெட்டுகள், மெழுகுவர்த்தி, டவல்கள், தீப்பெட்டிகள், நாப்பின் ஆகியவை ரூபாய் ஒரு லட்சம் மதிப்பில் என மொத்தம் ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
இதில் நிறுவன தலைவரும், கும்பகோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சாக்கோட்டை க அன்பழகன் எம்எல்ஏ, இன்று (ஆகஸ்ட் 5) மாலை கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து ஒப்படைக்க, அதனை தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் முறைபடி பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்பி வைத்தார்.