கன்னியாகுமரி:கன்னியாகுமரியில் நாட்டுக் கோழி வளர்ப்பு பண்ணைகளை நிறுவத் தேவையான கோழி கொட்டகை கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு மற்றும் 4 மாதங்களுக்குத் தேவையான தீவனச்செலவு ஆகியவற்றிற்கான மொத்த செலவில் 50 சதவீதம் மானியம் (ரூ.1,56,875) மாநில அரசால் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெறத் தகுதி வாய்ந்த பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், "கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள் அல்லது அலகு) 100 நாட்டுக் கோழிப்பண்ணை அலகுகள் நிறுவிட 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம் 2022 - 2023 மற்றும் 2023 - 2024ஆம் ஆண்டுகளில் வெற்றிகரமாக செயல்படுத்தி முடிக்கப்பட்டது.
நாட்டுக் கோழிப்பண்ணை அமைக்க 50% மானியம்: அதன் காரணமாக நடப்பாண்டில் இத்திட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் நாட்டுக் கோழிப்பண்ணைகள் நிறுவுவதற்குத் தேவையான கோழி கொட்டகை, கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு ஆகியவற்றிற்கான மொத்த செலவில் 50 சதவீதம் மானியம், அதாவது ரூ.1 லட்சத்து 56 ஆயிரத்து 875 மாநில அரசால் வழங்கப்படும். மீதமுள்ள 50 சதவீதம் பங்களிப்பை வங்கி மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ பயனாளிகள் திரட்ட வேண்டும்.