தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“நான் பாஜகவிற்கு வர வேண்டுமென்றால் அவர்கள் பெரியார் வாழ்க என்று சொல்ல வேண்டும்” - கனிமொழி அதிரடி பேச்சு! - Kanimozhi MP - KANIMOZHI MP

Kanimozhi: தமிழகத்தில் தேர்தல் நியாயமான முறையில் நடந்துள்ளது. வாக்கு எண்ணிக்கையில் சந்தேகம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தால், அவற்றை சரிசெய்யும் வகையில் தேர்தல் ஆணையத்தில் சட்ட ரீதியாக பல வழிமுறைகள் உள்ளது என கனிமொழி தெரிவித்துள்ளார்.

கனிமொழி, அணாமலை, பிரேமலதா விஜயகாந்த்  புகைப்படம்
கனிமொழி, அணாமலை, பிரேமலதா விஜயகாந்த் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 6, 2024, 10:03 PM IST

சென்னை: ‘காலம் உள்ளவரை கலைஞர்’ என்ற நவீன புகைப்படக் கண்காட்சி, சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சி அரங்கத்தில், கலைஞரின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளான திருவாரூரில் தொடங்கி, சென்னை மெரினா கடற்கரை நினைவிடம் வரை என 100க்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

கனிமொழி செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) இந்த நவீன கண்காட்சியகத்தை, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மற்றும் அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறியதாவது, “திராவிட இயக்கத்தின் கருத்துக்களையும், திராவிட இயக்கத்தின் போராட்டங்களையும் சுவாரஸ்யமாக புதிய நவீன தொழில்நுட்பத்தில் கொண்டு வந்த அமைச்சர் சேகர் பாபுவுக்கு நன்றியைத் தெரிவித்தார்.

இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், தேர்தலின் முடிவு என்பது மக்கள் மிகத் தெளிவாக பிரதமர் மோடி ஆட்சிக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள். மதம், சாதி மற்றும் மொழியின் பெயரால் மக்களை பிரித்தாலும் அரசுக்கு எதிராக மக்கள் தெளிவான முடிவை அளித்துள்ளனர்” என்று கூறினார்.

மறுவாக்கு என்ணிக்கை வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “தமிழகத்தில் தேர்தல் நியாயமான முறையில் நடந்துள்ளது. வாக்கு எண்ணிக்கையில் சந்தேகம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தால், அவற்றை சரிசெய்யும் வகையில் தேர்தல் ஆணையத்தில் சட்ட ரீதியாக பல வழிமுறைகள் உள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “10 வருடங்கலளுக்கு முன்னதாக பாஜக 2 இடங்களில் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் 19 சதவீத வாக்கு பெற்று வெற்றி பெற்றிருந்தனர். தற்போது இவர்கள் ஸ்டார் வேட்பாளர்கள் என்று கூறும் தமிழிசை செளந்தரராஜன் மற்றும் பிரதமர் 10 முறை தமிழகத்திற்கு வந்து பிரச்சாரம் செய்தும், அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டும் அவர்கள் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. மேலும், தற்போது அவர்கள் 18 சதவீத வாக்குகளையே பெற்றுள்ளனர். எனவே, வாக்குகள் சரிந்துகொண்டே வருகிறது” என்றார்.

கனிமொழி பாஜகவில் இணைந்தால் பதவி விலகுவதாக அண்ணமலை கூறியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அலித்த அவர், “நான் பாஜகவிற்கு வர வேண்டுமென்றால் அவர்கள் பெரியார் வாழ்க என்று சொல்ல வேண்டும். பாஜகவினை வளர்ப்பதற்கு நான் போக வேண்டிய அவசியமில்லை. திமுக தான் என்னுடைய இயக்கம். என்னை இங்கிருந்து யாரும் அசைக்க முடியாது. பாஜகவை வளர்க்க வேண்டியது என்னுடைய வேலை அல்ல” என்று பதில் அளித்தார்.

இதையும் படிங்க:"விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை" - பிரேமலதா விஜயகாந்த் அடுக்கும் காரணங்கள்! - Premalatha Vijayakanth

ABOUT THE AUTHOR

...view details