தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“பாஜக - தெலுங்கு தேசம் கூட்டணி எத்தனை நாள் நீடிக்கும்?” - கே.பாலகிருஷ்ணன் கேள்வி! - k balakrishnan

K Balakrishnan: ஒரே நாடு ஒரே தேர்தல், எம்பிக்கள் அதிகப்படுத்துதல் போன்ற பிரதமர் மோடியின் எந்த திட்டமும் நிறைவேற வாய்ப்பு கிடையாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கே.பாலகிருஷ்ணன் புகைப்படம்
கே.பாலகிருஷ்ணன் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 7, 2024, 10:47 PM IST

Updated : Jun 7, 2024, 10:59 PM IST

மயிலாடுதுறை:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேரியக்க முன்னோடி தங்கையன் மகள் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டார். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறியதாவது, “ நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய மக்கள் நல்ல தீர்ப்பினை வழங்கியுள்ளனர். மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைப்பதாக கூறினாலும், தனித்து ஆட்சி அமைக்க முடியாமல் கூட்டணிக்கு கையேந்தும் நிலைமைக்கு மக்கள் உருவாக்கியுள்ளனர்.

கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியில் பல லட்சம் வாக்குகள் குறைவாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் நாசகர திட்டங்களை செயல்படுத்தியதற்கு மக்கள் உரிய பாடம் புகட்டியுள்ளனர். மக்களவையில் 234 உறுப்பினர்கள் வெற்றிபெற்று எதிர்கட்சியில் இருக்கின்றனர்.

எதிர்காலத்தில் பாஜகவின் மோசமான நடவடிக்கைகளை நாடு முழுவதும் மக்கள் ஒன்றுபட்டு போராடுவது மட்டுமல்லாமல், மக்களவையில் போராடுவதற்கு வலுவான எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் உருவாக்கி தந்துள்ளனர்.தமிழகத்தில் 40 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றிபெற்று, இந்திய அரசியலில் தீர்மானகரமான பங்கினை வகிக்கக்கூடிய அளவிற்கு தமிழகம் உயர்ந்து உள்ளது.

நீட் தேர்வு:பிரதமர் மோடி அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வு மிகப்பெரிய அளவில் பல குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. ஒரே மையத்தில் தேர்வு எழுதி இருக்கிறவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெறுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். முறைகேடுகளை விசாரிக்க கோரிக்கை எழுந்துள்ளது. நீட் தேர்வு வேண்டுமா, வேண்டாமா என்பதை அந்தந்த மாநில அரசுகள் தான் தீர்மானிக்க வேண்டும். தமிழக அரசு நீட் தேர்வு வேண்டாம் என்றால், மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்.

மேட்டூர் நீர் திறப்பு: குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்க மேட்டூரில் தண்ணீர் குறைவாக உள்ளது. தென்மேற்கு பருவமழை சாதகமாக அமைந்திருந்தாலும், காவிரி நிதிநீர் ஆணையம் தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடகாவில் இருந்து பெற்றுத்தர வேண்டும். கர்நாடகா அரசிடம் நமக்கு கொடுக்க வேண்டிய பங்கு தண்ணீரைத்தான் கேட்கிறோம்.

அதனை உரிய நேரத்தில் கர்நாடகா கொடுத்தால் குறுவை சாகுபடிக்கு பயன்படும். மழைக் காலத்தில் அதிக அளவு நீரை திறந்துவிட்டு எந்த பயனும் இல்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஒன்றிய அரசு, காவிரி மேலாண்மை வாரியம் தமிழகத்திற்கு உரிய பங்கு நீரை பெற்றுத்தர வேண்டும்.

ஒரு தேர்தலில் வாக்கு சதவீதம் அதிகரித்திருப்பது என்பது அடுத்த தேர்தலில் பிரதிபலிக்கும் என்று கூற முடியாது. தமிழகத்திற்கு மோடி பலமுறை வந்தும், பலகோடி ரூபாய் செலவு செய்தும் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. பல தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளனர்.

பிரதமர் மோடியின் திட்டம் நிறைவேறாது:பிரதமர் மோடியின் எந்த திட்டமும் நிறைவேற வாய்ப்பே கிடையாது. ஒரு நாடு ஒரே தேர்தல், எம்பிக்கள் அதிகப்படுத்துதல் போன்ற எந்த திட்டங்களையும் நிறைவேற்ற முடியாது. கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு ஏற்றுக்கொள்வாரா? கூட்டணி கட்சிக்குள் ஒருமித்தகருத்து வராது. அரசியல் சாசனத்தை திருத்துவதற்கு இரண்டில் மூன்று பங்கு மெஜாரிட்டி வேண்டும். பாஜகவுக்கு தனிமெஜாரிட்டியே இல்லை, எப்படி செயல்படுத்த முடியும்?” என்றார்.

கேரளாவில் சட்டமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிக இடங்களை பெற்றுள்ளது. ஆனால், மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறவில்லை என்ற செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, “கேரளாவில் பாஜகவிற்கு இடமில்லாமல் போயிருக்கிறது என்பது மகிழ்ச்சியான செயல். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று மக்கள் நினைத்து கேரளாவில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.

கம்யூனிஸ்ட் வெற்றி பெறவில்லை என்றாலும், பாஜக படுதோல்வி அடைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. சந்திரபாபு நாயுடு கட்சியை இரண்டாக உடைத்து பாஜகவில் மோடி இணைத்தார். இந்த தேர்தல் ஜெகன்மோகன் ரெட்டியை எதிர்க்க கூட்டணி அமைத்துள்ளார். இந்த கூட்டணி எத்தனை நாள் நீடிக்கும் என்பதை பார்ப்போம்” இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க:உரிமை கோரிய நரேந்திர மோடி.. ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த திரெளபதி முர்மு! - narendra modi sworn

Last Updated : Jun 7, 2024, 10:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details