தூத்துக்குடி:இந்திய கடற்படை சார்பில் சாகர் டிபன்ஸ் இன்ஜினியரிங் நிறுவனம் தயாரித்துள்ள மாதங்கி எனப்படும் ஆளில்லா ரோந்து கப்பல் இன்று கொச்சி வழியாக சுமார் 850 கடல் மைல் கடந்து தூத்துக்குடி துறைமுகத்தை அடைந்துள்ளது.
இந்திய கடற்படை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள 'மாதங்கி' (matangi an autonomous suface vessel) என்ற ஆளில்லா ரோந்து கப்பல் மும்பையிலிருந்து இன்று காலை தூத்துக்குடி வஉசி துறைமுகம் வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து மாதங்கி கப்பலுக்கு கடற்படை சார்பில் வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு துறைமுக தலைவர் சுசந்தகுமார் புரோஹித் தலைமை தலைமை வகித்தார். ஐசிஜி கமாண்டன்ட் முதித்குமார், நேவி கமாண்டன்ட் ராஜலிங்க நாகப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த மாதங்கி என்ற ஆளில்லா ரோந்து கப்பல் மத்திய அரசின் உள்நாட்டு உற்பத்தி திட்டத்தின் கீழ் பாதுகாப்பு அம்சங்களை பலபடுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உள்நாட்டு உற்பத்தி திட்டமானது ஸ்டார்ட் அப் திட்டங்களின் முன்னுரிமை அளித்து வருகிறது. அதன் பயனாக சாகர் டிபன்ஸ் இன்ஜினியரிங் (sagar defence engineering) நிறுவனம் தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் புதுமையான இந்த மாதங்கி ரோந்து கப்பலை வடிவமைத்துள்ளது.